475 தங்கள் மீது தவறில்லை என்றும் பெரும்பான்மையான மக்களுக்குக் காட்டிக் கொள்வதுடன், அறிவாளிகளாகச் சிந்திக்க வேண்டும்-என்றும் பெ ரி யார் கேட்டுக். கொண்டார். - - அடுத்த படியாகப் பெரியாருக்குக் கடினமான வேலை ஒன்று காத்திருந்தது. அதாவது அதிருப்தி கொண்டுள்ள தமது தோழர்களுக்குத் தொடர்ந்து சில சான்றுகள், ஆதாரங்கள் காட்டித் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யால், திராவிடர் கழக-சுயமரியாதை இயக்கக் கொள்கை களுக்கு ஒன்றும் கேடு நேர்ந்துவிடாது, என்று நிரூபிக்க வேண்டும். அதற்காகப் பத்திரிகைகளை நல்லவண்ணம் துருவித் துருவிப் படித்து வந்தார் பெரியார்' மந்திரிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது கீதை, இராமாயணம், குரான், பைபிள் போன்ற நூல்கள் பக்கத்திலிருந்தும் அவற்றைத் திரும்பிக்கூடப்பார்க்கவில்லை. அறநிலைய மந்திரி உள்பட அனைவரும், மனப்பூர்வமாக' என்றே பதவிப் பிரமாணம் செய்தார்களே, என்று பத்தி ரிகைகள் அங்கலாய்த்தன. இது பெரியாருக்கு ஆதரவான முதல் சான்று அடுத்து, தேர்தல் நேரத்தில் இராஜாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தினரைத் தமது இனத் தாருக்கு அறிமுகப்படுத்தும் போது, இவர்கள் தி.க. வாசனையை அடியோடு கழுவிவிட்டு வந்தவர்கள் என்றாரே, அது பொய்யென்று இந்த மந்திரிகள் பதவி ஏற்ற: நாளிலிருந்தே தெரிய ஆரம்பித்து விட்டது, இரண்டாவது சான்று பெரியாருக்கு ஆதரவாக மூன்றாவதாக, நீங்கள் தாம் திராவிடர் கழகத்தை விட்டு வந்தவர்களாயிற்றே; திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக, தர்ம முன்னேற்றக் கழகம்-அப்போதும் D.M.K. தானே-என்று. பெயரை மாற்றச் சொன்னதற்கு இணங்கவில்லை இவர்கள்! நான்காவதாக, உங்கள் கொடியில் எதற்குக் கருப்பும். சிவப்புமாக இரு நிறங்கள்? பேத உணர்ச்சி எங்களுக்குக் கிடையாது என்று காட்ட, ஒரே நிறத்தில் கொடியை.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/506
தோற்றம்