476 மாற்றி விடுங்களேன்-என்ற பார்ப்பனர் ஆலோசனைகளை தி.மு.க. அலட்சியப்படுத்தியது. - - இப்போதைக்கு இந்தச் சான்றுகளே போதும் என்று பெரியார் எடுத்துக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சிறிதளவு நன்மை செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் ம ன ப் பக் கு வ ம் பெறவேண்டும். கோர்ட்டில் வாதாடுகிறபோது,வழக்கின் தன்மை ஒரு மாதிரி யாக இருக்கும். பஞ்சாயத்தாரைக்கொண்டு ராஜி பேசு கிறபோது, வழக்கின் தன்மை வேறு மாதிரியாகத்தானே இருக்கும்.என்பதை மக்க்ள் விளங்கிக் கொள்ளவேண்டும்என்றார் பெரியார். - அடுத்து இரண்டொரு நாட்களுக்குள், பெரியாருக்குத் தமது கருத்தை வேடிக்கையாகச் சொல்ல இன்னொரு வாய்ப்பைத் தந்துவிட்டார், பொதுப்பணி, போக்குவரத்து, வீட்டுவசதித் துறை அமைச்சரான கலைஞர். மு.கருணாநிதி. பெரியாரின் 16-3-1967 விடுதலை’ தலையங்கத்தின் ஒரு பகுதியே விவரங்களை விளக்கும்:-அட பாவமே மந்திரி கலைஞர் கருணாநிதி தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டுவிடுவேன்!’ என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அநாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியிலே மாட்டிக் கொள்ளவேண்டும்? அப்துல் காதருக் கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? ஒழுக்கம்-நாணயம் கெட்டால், நீதிகெட்டால், நம் :பிக்கை கெட்டால், நன்றி கெட்டால் என்பது போன்ற மனிதத்தன்மை எங்களிடம் இல்லையானால், எங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், பதவியை விட்டுவிடுவேன்(ஏன்) உயிரையும்கூட விட்டு விடுவேன்.என்று கூறலாம்! 'கப்சாவும் விடலாம்! அதை விட்டுவிட்டு, தமிழைக் காப் -பாற்றா விட்டால், அதற்குக் கேடுவந்தால் பதவியை விட்டு விடுகிறேன் என்றால், அதற்கா மக்கள் ஒட்டுக் கொடுத் தார்கள்? ஒவ்வொன்றுக்காகவும் மந்திரி பதவியை விட்டு விடுவேன் என்றால், அப்படி ஒரு மனிதனுக்கு எத்தனை மந்திரிப் பதவி இருக்கிறது? - . . . . . . . .
பக்கம்:தந்தை பெரியார்.pdf/507
தோற்றம்