உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

477 நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்கு. வரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தைச் சமய நூல்களை இலக்கியத். தைத் தமிழில் கொண்டு இருக்கிறோம்! சரி! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்? எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்கிறது. மந்திரி பதவியில் உட்கார்ந்து கொண்டு, தமிழுக்குக் கேடு வந்தால் பதவியை விட்டுவிடுகிறேன்’ என்கின்ற மந்திரிக் கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச் சுவராக வேண்டிய கோயில்களை எல்லாம் கட்டி முடிக்கின்ற திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் (பக்தவத்சலம்) தரத்தில் என்ன வித்தி யாசம்? நான் இதை மந்திரி மீது குறைகூற எழுதவில்லை;. மந்திரிக்கு உள்ள பகுத்தறிவு எனக்கு நன்றாய்த் தெரியும்! ஏன், பாமர மக்களுக்கு வழியல்லா வழியில் பயப்பட. வேண்டும்? என்பதற்காகவே எழுதுகிறேன்! தமிழ் பற்றிய இந்தக் கருத்து, என் இன்றையக் கருத்தல்ல! இந்தி எதிர்ப்புக் காலந்தொட்டு எனக்கு இந்தக் கருத்துதான். இது மந்திரிகளுக்கும், தமிழுக்காக இன்று பாடுபடுபவருக் கும் தெரியும்! அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக், கல்வி அதிகமென்றே கற்றுவிட்டோம், அறிவில் லாமல்: திடமுளமோ கனமாடக், கழைக்கூத், தாடச், செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை!. தடமுலைவே சையராகப் பிறந்தோ மில்லை; சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம் இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை! என்னசென்ம மெடுத்துலகில் இரக்கின் றோமே? தமிழ் படித்தால் பிச்சைகூடக் கிடைக்கவில்லை; தமிழ். படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும், 100 ஆண்டு.