உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 களுக்கு முன்பே ஒரு தமிழ் கற்ற அனுபவப் புலவர் மேற் கண்ட பாடல் மூலம் எடுத்துக் காட்டி இருக்கிறார்.' யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? அரசியல் நிலையினை இனநலம் என்ற அளவு கோலால் அளந்து பார்த்து, இந்த ஆட்சி நமக்குப் பயன்படுமா? தமிழர் நலனுக்குப் பாதுகாப் பாக இருக்குமா? உரிமைகள் பறிபோகாமல் காப்பாற்றப் :படுமா? சமதர்மம் தழைக்குமா? பகுத்தறிவு ஓங்குமா? என்று பார்ப்பதுதானே பெரியாரின் கொள்கை இந்தப் பொதுத் தேர்தலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் திர்க்க தரிசனத்துடன், அரசியல் முன்கணிப்புத் திறனுடன், ஒன்று கூறியிருந்தார். 1-1-62 :விடுதலை’ தலையங்கப் பகுதியில் இனி கண்ணிர்த்துளிக் கட்சி, தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள் இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம்;. நானும் ஆதரவளிக்கலாம்!' என்று எழுதியிருந்தது இருதரப்பாருக்கும் அனுசரணையான வாசகமல்லவா? வந்து சந்தித்தவர்களுக்கும் வந்த பின் ஆதரிக்கத் தொடங்கியவருக்கும் இது ஒர் எழுதா ஒப்பந்தம்-உடன்படிக்கை-தானே? எனவேதான் பெரியார், தமிழர்களின் பிறப்புரிமையான வகுப்புரிமை முழக்கத்தை இப்போதும் தொடங்கினார்:'தமிழ் நாட்டில் தமிழர்கட்கு வகுப்பு உணர்ச்சி ஏற்பட்ட காலமான 1920-ஆம் ஆண்டு முதல், நாட்டில் ஒழுக்கம், நாணயம், அமைதி, கண்ணியம், நீதி, நேர்மை முதலிய எல்லா நற்குணங்களையும் ஒழியும்படிச் செய்துவிட்டார்கள்! யோக்கியன் அயோக்கியன் என்ற பேதமேயில்லாமல் செய்து விட்டார்கள். மனிதனுக்கு மனிதன், தான் எப்படிப் :பட்ட ஈனத்தன்மையான காரியங்களைச் செய்தாவது வாழ வேண்டியதுதான் மனிதப் பண்பு என்று ஆக்கிவிட்டார்கள். ஆண்களோ பெண்களோ, யாரும் ஒழுக்கத்தைப் பற்றியோ நாணயத்தைப் பற்றியோ சிந்திப்பது முட்டாள்தனமென்றே ஆக்கிவிட்டார்கள்.