உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481 மும், அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிவினைக் கோரிக்கையை விடாமல்தான் வலியுறுத்தி வந்தன. - பெரியார் 30-3-67 விடுதலை'யில் நாட்டுப் பிரிவினை’ பற்றித் தலையங்கம் எழுதினார்:- காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி செய்து கொண்ட வுடன், தி.மு.க. நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டோம் என்று சொல்லித், தேர்தலுக்கு நின்று, இன்று ஆட்சிக்கும் வந்துவிட்டார்கள் தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சினை ஆகிவிட்டதால், அவர்கள் அதைப் பற்றிப் பேச்சு மூச்சுக்கூட விடக்கூடாத நிலையில் இருக் கிறார்கள்! மத்திய அரசாங்கம் காங்கிரசார் கையிலிருப்பதால், அவர்களுக்குப் பயந்து கொண்டு, அடிக்கடி தி. மு. க.வினர் காலாகாலம் பார்க்காமல், நாங்கள் திராவிட நாடு பிரச்சி னையைக் கைவிட்டு விட்டோம். விட்டுவிட்டோம். விட்டே விட்டோம்!” என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள். நாமோ தேர்தலுக்கு நிற்கிறவர்கள் அல்ல. ஆனாலும், நமது திராவிடர் கழகத்தில் அது (திராவிட நாடு பிரிவினையே) ஒரு கொள்கையாய் இருந் தாலும், காமராஜர் காங்கிரஸ் தலைவரானவுடன், சம தர்மம்-சோஷலிசம் காங்கிரசின் கொள்கையாக ஆக்கப் பட்டுவிட்டதால், அது தக்கபடி அமுலுக்கு வந்தால், திராவிட நாடு பிரச்சினை அவசியமாக இருக்காதுஅல்லது கூடாததாய் இருக்காது-என்று கருதி, அதிகமாய்ப் பிரஸ்தாபிக்காமல் இருந்தோம். . என்றாலும், காங்கிரசின் பலக்குறைவையும், பார்ப்பன ரின் கட்டுப்பாடு பலத்தையும் பார்க்கும்போது, சோஷலிச அமுலுக்குத் தொல்லை ஏற்படும் என்று பயப்பட வேண்டி யிருப்பதால், இப்போது திராவிட நாடு பிரச்சினையைப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் அவசியமென்றே தெரிகிறது. பெ.-31