உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 இந்தியாவில் சோஷலிசத்திற்கு அனுகூலமானவர்கள் . முழுமூச்சுடன் பாடுபடுகிறவர்கள் எத்தனை பேர் என்றே கணக்கிட முடியவில்லையே! மொழி பேதத்தால் ஒருவருக் கொருவர் கலந்து பேசிக்கொள்ள முடிவதில்லை. கலாச்சார பேதத்தால் நாம் ஒரு நாட்டு மக்கள், சகோதரப் பிரஜைகள் என்கின்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. கூட்டுப் பொறுப்பு என்பதே எதில் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை! நான் தமிழ் நாட்டில், கிராமம் பட்டி தொட்டி முதலிய எல்லா ஊருக்கும், எல்லா மக்களுக்கும், தெரிந்தவனாக இருந்தாலும், கேரளாவில், வைக்கம் கிளர்ச்சியில் தெரிந்து கொண்டதால், ஒரு 5,000 பேருக்கு என்னைத் தெரிந்திருக்க லாம். கர்நாடகத்தில், பெங்களுரில், சில ஆயிரக்கணக் கான மக்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். ஆந்திராவில் ஒரு சிலர் இருக்கலாம். பிறகு, மற்ற நாடுகளில் என்னைத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? 55 கோடி இந்திய மக்களில் 55 ஆயிரம் வெளி மாநில, மக்கள் தவிர, மற்றவர்களுக்கு நானே தெரியாதவனாக இருக்கும்போது, இந்தியா எப்படி ஒரே நாடாக இருக்க முடியும்? இந்திய மக்கள் எப்படி ஒரே சமுதாய மக்களாக இருக்க முடியும்? இப்படி இருப்பதனால் தனிப்பட்ட மாநில மக்களுக்கு வரும் இலாபம் என்ன? -- 55 கோடி பேருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான சாதியாருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான மொழி பேசு கிறவர்களுக்கும் ஒரே நாடு, நூற்றுக்கணக்கான கலாச் சாரம் கொண்ட மக்களுக்கும் ஒரே நாடு, பல்வேறு மதம் உடைய மக்களுக்கும் ஒரே நாடு-அதாவது இவ்வளவு பேர்களுக்கும் ஆட்சிக்கு ஒரே ஒரு நாடு இத்தனை பேரை யும் அடக்கி ஆள ஒரே ஒரு கட்சி என்றால், இது என்ன நாடா பாழா? நரகமா? ஜெயிலா? சர்க்கஸ்காரன் வளையத் துக்குள் இருக்கும் மிருகப் பிராணி போல், இப்படி இருக்க என்ன அவசியம் உள்ளது? இதுதான் சுதந்திரமா? மானம்ரோஷம் கண்ணாடி போட்டுக்கொண்டு பாருங்கள்!