உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 இந்த நிலையில், உண்மையான சமதர்மவாதிகள், சம தர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக்கொண்டு, பொதுவுடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக்கொண்டு முயன்றால், பயன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். பொது உடைமை' என்பது பகுத் தறிவின் எல்லையாகும்! எனது சமுதாயத்துறை சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கை இனியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால், அது பொதுவுடைமைக்கு நல்ல வண்ணம் பயன்படலாம்.” r w மேதினத்தன்று பெரியார் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்:-காங்கிரசை விட தி.மு.க. தேவலாம். நமது தோழர்கள் அவர்களிடம் அன்புடன் பழகவேண்டும். எந்தக் காரணத்தாலோ நமக்குள் தகராறு இருந்தது, இப்போது போச்சு. போச்சு என்றால் போனதுதானே? பிறகு என்ன? என்று கேட்டு முடித்தார் பெரியார். கம்யூனல் ஜி.ஒ.வை அந்தந்த மந்திரிகளே தமது இலாக்காவில் அமுல் படுத்தத் தொடங்கலாமே தி.மு.க. ஆட்சி என்ன, வைதிக ஆட்சியா? இதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?’ என்றும்காமராஜர் இவர்களுக்கு ஆறுமாதம் தவணை தந்தார். நான் ஒரு அய்ந்து வருடம் தவணை தருகிறேன். என்ன இருந்தாலும் அசல் நாத்திதர், பகுத்தறிவாளர் ஆட்சி தமிழ் நாட்டில் நடப்பது இதுதானே முதல் தடவை?’ என்றும்கருபாய்க்கு ஒருபடி அரிசி போடுவது தவறு. மிகுந்த நட்டம் ஏற்படும், சிந்தித்துச் செயல்பட வேண்டும். இந்த அரிசிவிலைக் குறைப்பே ஒரு நியூசென்ஸ், அநாவசியத் தொல்லை” என்றும்-பெரியார் அறிவுறுத்தல் தலையங்கம் திட்டினார். இந்த மந்திரிசபை ஒழிந்தால், அடுத்த மந்திரி சபை எதுவானாலும், அது பார்ப்பன ஆதிக்க, அல்லது பார்ப்பனக் கலப்பு மந்திரி சபையாகத்தானே இருக்கும்?” என்றும் கேட்டார் பெரியார்.