492 வாக்களிப்பது, இன்னொன்று ம. பொ. சி.க்கு மந்திரி பதவி தருவது. திரு அண்ணாதுரைக்குக் காரியம் வெற்றி பெற். லாம். ஆனாலும் வாசனை போய் விடுமே! ஆச்சாரியாரை நம்பி இனியும் ஏமாற வேண்டாம்!'- என்று எச்சரித்தார் பெரியார். இந்திய யூனியனிலிருந்து தமிழர் வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டால்தான் மானத்தோடு வாழ முடியும், என்று 13-ம் நாள் எழுதினார். ம. பொ. சி. க்கு மந்திரிப் பதவி தர வேண்டாம். அவர் ராஜாஜியின் கையாள்-என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார், பெரியார், ராஜாஜிக்குத் தாமே. முதல்வராக வர வேண்டுமென்ற நைப்பாசை இருந்தது என்ற செய்தி பெரியாருக்கும் தெரியும். மதுவிலக்குக் குற்றங்கள் பெருகி வரும் விவரப் பட்டியலை வெளியிட்டு, வெற்றி பெறாத மதுவிலக்கு இன்னும் வேண்டுமா? இது அண்ணாதுரைக்கு அர்ப்பண்ம்என்றும் செய்தி வெளியிட்டார் பெரியார். - இந்த ஆண்டில் பெரியாரின் முக்கிய பணியாகத் தஞ்சை மாவட்டத்தில், திருவாரூர்-தஞ்சை ரயில் மார்க்கத்தில், திருமதிக்குன்னம் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் செல்லக் கூடிய விடையபுரம் கிராமத்தில், சுயமரியாதைப் பகுத் தறிவுப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் மே மாதம் தொடங்கி நடைபெறும், வரக் கூடியவர்கள் 24ந் தேதிக்குள் வர வேண்டும் என்பதான அறிக்கைகள் விடுதலை'யில் பிரசுர மாயின. நாகரசம்பட்டியில் (மே 21-ல், என். எஸ். சம்பந்தம் அவர்களின் தங்கை, மற்றும் மகள் ஆகியோரின் திருமண விழாக்களில் பெரியார் கலந்து கொண்டார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரண்டும் தேவையில் லாத வெள்ளையானைப் பதவிகள். சிறுபான்மையினர் இந்த இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். அதிகார மில்லாத அரசர் பட்டத்துக்கு வந்திருக்கிறார் என்றாலும் ...முன்னவர் முஸ்லீம், பின்னவர் பார்ப்பனர், பிரதம மந்திரியோ பார்ப்பனத்தி-என்று பெரியார் குறிப்பிட்டார். மந்திரிகளே! மெல்லப் போங்கள் ஜாக்கிரதையாக
பக்கம்:தந்தை பெரியார்.pdf/523
தோற்றம்