509 பெரியார் சிறப்புச் சொற்பெருக்கு நிகழ்த்தினார். இந்தவிழா மேடையில் பெரியாரின் வேன் டிரைவர் மானுவேல் ராஜ், மூன்று குழந்தைகளின் தாயான அலமேலுவைப் புரட்சித். திருமணம் புரிந்து கொண்டார். மேலும் 3 ஜோடி மணமக் களும், தங்கள் திருமணத்தை இங்கேயே நிறைவேற்றிக் கொண்டார்கள். பெரியார் டிரம்வாசிப்பது போலும், காமராசர் புல்லாங்குழல் ஊதுவதுபோ லும், அண்ணா ஜால்ரா போடுவது போலும் மெயில் ஏடு கார்ட்டுன் வெளி: யிட்டுத், தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டது. பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி களுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய முதலமைச்சர் அண்ணா கூறினார்:- & "நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாகிலும் ஒரு. பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாகும். ஆனால் உங்களிலே பலருக்கு இது புதுமை யானதாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில், இடை யில் சில நாள் இல்லாமல் இருந்த பழைய நிகழ்ச்சிதானே தவிர, இது புதிதல்ல. பெரியாரவர்களுடைய 89-வது பிறந்த நாள் விழாவானது, இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையானது. கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக, எல்லாக் கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத் தக்க தாகத், தமிழகமக்கள் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் போற்றத்தக்க நிகழ்ச்சியாக, இந்த மாபெரும் நிகழ்ச்சி. அமைந்திருக்கிறது. . தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ் விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம் அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆம் * யிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை; இனியும் காணப்போவதில்லை.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/538
தோற்றம்