உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 - பிறந்த நாள் கொண்டாடுகிற நேரத்தில், என்னுடைய தினைவுகள் திராவிடர் கழகமாகவும், அதற்குமுன், தமிழ இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் பாயவிட்டுக் கொண்டிருக் கின்றன. . . ஒரு போர்வீரன் களத்தில் புகுந்து, இந்தப் படையை முறியடித்தேன்; அந்தப் படையை வென்றேன் என்று காட்டி, மேலும்மேலும் செல்வதுபோல் பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுதும் களத்தில் நிற்கிற போராட்டமயமாகும். முதல் போராட்டம் புத்தரைப் போன்று மக்களுக்காகச் சுக போகங்களைத் துறந்ததாகும். பெரியார் அவர்களின் குடும்ப நிலை எப்படிப் பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச்செல்வாக்கு ; வாணிபத்தில் ஆதாயம்; நிலபுலன்கள்; வீடுவாசல்-இவைகளையெல்லாம் பெரியாரவர்கள் திரும்பி ஒருமுறை பார்த்து விட்டு, இவைகள் எனக்குத் தேவை .யில்லை; வீட்டை மறப்பேன்; செல்வத்தை மறப்பேன்; செல்வந் தருஞ் சுகபோகங்களை மறப்பேன்; அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் என் நாட்டுமக்களுக்கு அறிவுச் செல் வத்தைத் தரப் போகிறேன்! நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்ற மக்களுக்குச் சிந்தனைச் செல் வத்தைத் தரப்போகிறேன். பகுத்தறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன்-என்று துணிவுடன்; குறுக்கிடுவோரின் ஆற்றலைமுறியடிப்பேன் என்று கிள்ம்பினார்களே அதுதான் முதல் போராட்டத்தில் பெற்ற வெற்றியாகும் அதற்குப் பிறகு, அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றி தான் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன், தேசியம் என்பது ம்காபுரட்டு இந்தியா என்கிறீர்களே அது மிகப் பெரிய கற்பனை என்று கூறி, அவை இரண்டையும் உடைத் தெறிவதுதான் என்னுடைய வேலை என்று கிளம்பினார்கள். பிறகு, ஆட்சிமொழி என்று சொல்லி, எதிர்த்த பின்னர், இப்போது இந்தி, இணைப்பு மொழி இடத்துக்கு வந்திருக்