உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

511 கிறதென்றால்,அது பெரியாரவர்கள் நடத்திய போராட்டத் தினால்தான்! - மொழிப்பிரச்சினை அவர்களைப் பொறுத்தவரை மிகச் சாதாரண பிரச்சினை. தமிழ் மக்களிடையே பரவியிருக்கிற காட்டுமிராண்டித்தனமான கொள்கைகள் ஒழிந்து, மனிதத் தன்மையும் ஒழுக்கமும் பண்பும் வளரத்தக்க விதத்தில் அறிவுப்புரட்சி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நாட்டம். எந்த நாட்டிலும், இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Putting centuries into capsules grgårl Irrff.5Gar og Gustav! 20 ஆண்டுகளுக்கு முன் வடநாட்டுக்கு நான் அவர் களோடு போயிருந்த நேரத்தில், சில பெரியவர்கள் கேட்டார்கள், உங்களை இன்னுமா விட்டு வைத்திருக் கிறார்கள்? நீங்கள் சொல்வதிலே பத்தாயிரத்தில் ஒரு பங்கு நாங்கள் இங்கே சொன்னாலும், நீங்கள் செய்வதிலே ஆயிரத்தில் ஒரு பங்கு செய்தாலும்கூட, எங்களை அடியோடு அழித்திருப்பார்களே என்று. அப்படிப்பட்ட வீரமிக்க காரியங்களை நடத்திக் காட்டித், தாம் பெற்ற வெற்றிகளை இப்போது நம்மிடத்திலே ஒப்படைத்திருக்கிறார்கள் பெரியார் அவர்கள். இதே திருச்சியிலே, 1945ல் நடைபெற்ற மாநாட்டுக்கு முதல்நாள் பெய்த பெருமழையால், பந்தலும் திடலும் நாசமாயின. ஒரே இரவுக்குள் தண்ணீர் இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டுப், பந்தல் பக்குவப்படுத்தப்பட்டது பெரியாரின் தொண்டர்களால். அதேபோலத்தான் பழைமைச் சேறும் இப்போது துடைக்கப்பட்டுவிட்டது. ஒருமுறை சிவகங்கையிலே, செருப்புத் தோரணங்களைத் திரும்பிய பக்கம் எல்லாம் தொங்கவிட்டு, எங்களை வரவேற்றார்கள். r இன்று அவர்களுடைய பிள்ளைகளெல்லாம், இந்தப் பந்தலுக்குள் குழுமியிருக்கிறார்கள். அன்று வெறுத்தவர் இன்று போற்றுகின்றனர்! இப்படி ஒரு சமூகத்தை, ஒரு