உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 சிவசேனைக் கொடுமைகளை விவரித்துவிட்டு, 'இப்போது நாம் கொண்டாடஇருக்கும் கண்டனநாள் நாசவேலையல்ல. ய்ாருடைய சொத்தக்கும் சிவசேனைக்காரர்களைப் போல் நாம் சேதம் விளைக்கமாட்டோம். பம்பாயிலுள்ள நமது தமிழனை மேலும் உதைபடாமல் இங்கே அழைத்துக் கொள்ள, இங்கிருந்து நமது செல்வம் ஒரு துளியும் வெளியே o போகாமல்,தடுக்கத்; தமிழ்நாடு சுதந்தர ஸ்தாபனம் ஒன்றை உருவாக்குவோம்” என்று பெரியார், உருக்கமிக, ஒன்றரைப் பக்கம் எழுதினார். சென்னையிலுள்ள நண்பர்கள் கழகம், பெரியார்திடவில் பெரியாருக்கு நடத்திய பிறந்தநாள் பாராட்டு விருந்தில், அமைச்சர் மாதவன், ஏ. என். சட்டநாதன், டாக்டர் ஆர். ஜி. கிருஷ்ணன், மேஜர் ஜெனரல் அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். சண்முகம் நன்றி கூறினார். இங்கு பேசும்போது, பக்தவத்சலம் தமது ஆட்சியில் செய்த ஓர் இனத்துரோகத்தைப் பெரியார் வெளியிட்டார். பஞ்சாயத் துப் படிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த விடுதலை’ 2,000 பிரதிகளை நிறுத்திப், பதிலுக்கு, ராமசுப்பய்யரின் "தினமலர்' அனுப்ப ஏற்பாடு செய்தாராம், அந்த மக்ானுபாவர் . . 24-ந்தேதி அதிகாலை திண்டிவனம் அருகில் நடந்த ஒரு கார்விபத்தில் அமைச்சர் கலைஞரும், அவரோடு சென்ற மதுரை முத்து, கவியரசு பொன்னிவளவன், கருணானந்தம் ஆகியோரும் சிக்குண்டனர்.கார்பெருத்தசேதத்துக்குள்ளாகி டிரைவர் பாண்டியும், பலத்த காயத்துக்காளானார். கலைஞருக்கும் பெரிய ஆபத்து, மயிரிழையில் தப்பினார்! அன்று காலை அண்ணாவும் பிற அமைச்சர்களும் திண்டி வனம் வரை சென்று அழைத்துவந்து, மாலையில் சென்னைப் பொது மருத்துவமனையில் கலைஞரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெரியாரும் மணியம்மையாரும் அவரைப் பார்க்க 25-9–67 காலை 10 மணிக்கு மருத்துவமனை சென்ற போது, 50 கார்களாம்; ஆவல் நிறைந்த முகத்துடன் ஏராளமாக மக்கள் காத்திருந்தார்களாம்; பெரியாரே