519 ஆட்சி இது காங்கிரஸ்காரர்களே இந்தியை தேசிய மொழியாக்கி, இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். புலவர்களே! நீங்களே முன் வந்து இப்போது கடவுள் இல்லை என்று சொல்லவேண்டும். தமிழன் காட்டுமிராண்டி என்பதற்கு இன்னும் தீபாவளி கொண்டாடுகின்ற ஒரு சான்றே போதாதா?’ இந்தக் கருத்துகள் அக்டோபர் திங்களில் பெரியார் சுற்றுப் பயணங்களிலும், கட்டுரைகளிலும் சிதறிய முத்துகளாகும். திருச்சி வழக்கறிஞர்கள் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, உதகை குன்னூர் ஆகிய நீலமலைப் பகுதிகள், சிதம்பரம், சீரங்கம், வாழ்குடை போன்ற ஊர்களுக் கெல்லாம் சென்று வந்தார் பெரியார். தென் சென்னையில் முரசொலி மாறன் வெற்றி பெற்ற தும், மக்கள் தமிழராட்சிமீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கும், தமிழரின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மங்க வில்லை என்பதற்கும் இது நல்ல சான்றாகும் என்றார் பெரியார். திருக்குறளில் காணப்படும் மூட நம்பிக்கைச் சொற்களைப் பட்டியலிட்டு, 82 இருப்பதாகப் பெரியார் எடுத்துக் காட்டியிருந்தார். காட்டுமிராண்டிகளுக்கு 37 வகையான அடையாளங்கள், சோதிடம்பார்ப்பதுபோல் பல் வகை,உண்டு என்று ஒரு நாள் விளக்கியிருந்தார். பூனூலும் நெற்றிக்குறியும் அணிகின்றவர்களே! நீங்கள் பேசுகின்ற சமதர்மத்துக்கு இவை நேர்ப் பகையாயிற்றே-என்று ஏளனம் செய்தார் ஒரு நாள்! 8-11-67 அன்று திருச்சி பெரியார் பள்ளிகளின் நிறுவனர் நாளில் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு, நாட்டில் விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கியவர் பெரியார் என்றுகூறினார். பெருமக்கள் 1,000 பேர் பிரியாணி விருந்தில் பங்கேற்கப்; பெரியாரும் மணியம்மையாரும் உபசரித்தனர். கோயில்களின் உபரிப்பணம் சமூக நலனுக்கே செலவிடப்படும் என்றார் முதலமைச்சர் அண்ணா. அவரது இந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா உரையினை 19, 20-11-67 இரு நாட்களும் வெளியிட்டு
பக்கம்:தந்தை பெரியார்.pdf/548
தோற்றம்