உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 , 3’s "விடுதலை, அண்ணாவின் கூரிய பகுத்தறிவுக்கருத்துகளை யும், ஆங்கில மொழி உபயோகத்தின் மேன்மையையும் சுட்டிக்காட்டிற்று. 4-11-67 அன்று, ஏழாண்டுச் சிறைத் தண்டனை பெற்ற நடிகவேள் எம்.ஆம். ராதா, 15-ந் தேதி ஜாமீனில் வெளிவந்திருந்தார். சென்னை போயஸ்ரோடு அவரில்லம் சென்று, 16.11.67 அன்று, பெரியாரும் மணியம் மையாரும் ராதாவைச் சந்தித்து வந்தனர். 'காங்கிரஸ்காரர்களே! நான் காங்கிரசுக்கு எதிரி அல்ல. உங்களில் காமராசரை நீக்கி விட்டால், மீதி உள்ளவர் களின் தரம் என்ன? தி. மு. க. வில் உள்ள கடைசிமனிதனை விட மேலானவர் உங்களில் யாருமில்லை! ஆதலால் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். தி. மு. க. ஆட்சி யாளர்களே! உங்களைப் பகுத்தறிவாளர் என்றும், ஜாதி ஒழிப்பாளர் என்றும் பிரகடனப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் 9 மாதக் குழந்தைகள்தானே! உங்களைப் பார்ப்பன கூடியக்கிருமிகள் சுற்றும்; எச்சரிக்கையாயிருங்கள்! அய்க் கோர்ட் தலைமை நீதிபதியோ பார்ப்பனர்; நமது நீதிபதிகள் நிறைய வரவேண்டும்.’’ என்ற ரீதியில் பெரியார் அறிவுரைகள் இருந்தன. சென்னை மாநகராட்சி, பெரி யாருக்கு 22-11-67 அன்று மை லேடீஸ் பூங்காவில் வைத்துச் சிறப்பான வரவேற்பு வழங்கிப் பெருமை கொண்டது. அப்போது மேயர் இரா. சம்பந்தம். . .." 28-11-67 அன்று சட்டமாக்கப்பட்ட இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா திராவிடருக்கு ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகக் கிட்டாதிருந்த பெருவாய்ப்பை அளித்தது. அதாவது இதுவரை நடைபெற்றிருந்த சுயமரி யாதைத் திருமணங்கள் அனைத்துமே செல்லுபடியாவதற்கு (With retrospective effect)9]3+Lo-Lib oligolai Gjäggi, Limitli பனரின் மதகுருத்தன்மை ஒழியவும், மூடச் சடங்குகள் அகல வும் வழிவகுத்து, உரிமையளித்த இச்சட்டத்தை நிறை வேற்றியதன் மூலமாகப், பெரியாரின் நீண்ட நாளையக் தனவை நனவாக்கினார் முதல்வர் அண்ணா. நாம் இருக் கின்ற காலத்துக்குள், நமக்குப்பின் வேறு யார் வந்து