உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

521 ஆண்டாலும் மாற்ற முடியாதபடி, சில நிலையான காரியங்களை, அவை மூன்று நான்காயிருந்தாலும்கூடப் போதும்; செய்து முடிக்க வேண்டும், என்று சொல்லிய வண்ணமே அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றம், யூ. சி. வரை இலவசச்கல்வி قا وفاستناrة في 657 مقاهي .م . يو. ஆகிய திட்டங்களைக் கொண்டு வந்தார். கல்விக்கு நிறையச் செலவிடுவேன் என்ற அண்ணா கற்றை, முதல் பக்க ஏழுகாலப் பெருஞ்செய்தியாக, 11-12-67 வெளியிட்டு, அடுத்த நாள் பாராட்டுத் தலை யங்கமும் தீட்டியிருந்தது விடுதலை’ ஏடு. ஆனால், உலகத் தமிழ் மாநாடு சிறப்புடன் நடத்தப் போவதாக அண்ணா அறிவித்தது பெரியாருக்குச் சினத்தையே வரவழைத்தது! :உலகத் தமிழ் மாநாடாம் - வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? காங்கிரசை விட இந்த மந்திரி சபை தேவலாம் என்கிறார்கள்; இந்த நேரத்தில் ஏன் இந்தக் கூத்து? அனம் அண்ணாதுரை 1912-ல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லி விடட்டும் உலகத் தமிழ் மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன் சூத்திரனாகத்தானே இருக்கப் போகிறான்! இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும், கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்களல்லவா? தமிழர்களே! நம் எதிர் காலம் சுத்தத் தமிழில் இல்லை, ஆங்கிலம் கலந்தே பேசுங்கள்! தாயாரை மம்மி என்றே சொல்லுங்கள்' என்றார் பெரியார் ஆவேச மாக, அரசியல் சட்டப் பூச்சாண்டி என்னிடம் காட்ட முடியாது’ என்றும் காட்டமாக 15-12-67 அன்று எழுதினார். 5-12-67 விருதுநகரில், ஆசைத்தம்பி மகள் திருமணத் தில், சுயமரியாதைத் திருமணச் சட்டம் பெரியாருக்கே காணிக்கை என்றார் அண்ணா. டிசம்பரில் 7, 8, 9 மூன்று நாள் கூட்டங்கள் மழையால் ரத்தானது பெரியாருக்கு ருெத்தத் தரும் செய்தி. 6-11-6 அன்று கைக்கறிக்