522 தொழில் ஒரு நியூசென்ஸ்' என்று பெரிய தலையங்கம் விவரமாக எழுதினார். கைத்தறியாளரின் வாழ்க்கை நிலை, அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தை குட்டி முதல் அனைவரும் ஒவ்வொரு வகையில் பாடுபட்டும், தரித்திரம் தான்? அவர்களில் பலரும் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டனர். அவர்கள் நிலை உயர நிரந்தரமான பரிகாரம் கண்டு பிடிக்க வேணும். ரிபேட் தருவது அரசாங்கப் பணத்தை வீணடிப்பதே ஆகும். அதனால் சில ரகங்களைக் கைத்தறிக் கென்றே கட்டாயமாய் ஒதுக்கித் தீரவேண்டும். அதற்கான சட்டங்களைச் செய்ய வேண்டும்” என்றார். 19-ந் தேதி நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி கல்வி நிலையம்வீரமணி தலைமையில், அறிஞர் சி. என். அண்ணாதுரை திறந்து வைப்பார். பெரியார் அறிவுரை கூறுவார். க. ராஜாராம் எம். பி. கலந்து கொள்வார் என விடுதலை’ யில் செய்தி வந்தது. • . இந்த விழாவில் பெரியார், அண்ணாவுக்குப் பொன் னாடை போர்த்தினார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்ற குறளைச் சொல்லி, "நான் இவர்கள் தோற்க வேண்டும் என்று மனப் பூர்வமாகப் பாடுபட்டேன். இருந்தும் எல்லாவற்றையும் மறந்து, தீமை செய்த என்னைத் தண்டிப்பது போல், இதற் காகத் திருச்சிக்குப் புறப்பட்டு வந்து என்னைப் பார்த் தார்கள். இவர்களது பெருந்தன்மையால் எனக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. தலை நிமிர்ந்து பேச முடிய வில்லை. சங்கடப்பட்டேன்' என்றார். அண்ணா பேசும் போது, "பெரியாரின் கருத்துகளுக்கெல்லாம் சட்ட வடிவம் தருவோம். அதற்காகத்தான் பதவியில் இருப்போம். பெரியார் அவர்கள் பதவியை விட்டு எப்போது வரச் சொன்னாலும், அவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத் திலும் ஈடுபடுவோம். பதவியை விட்டு வரவா? இருக்கவா?” என்று கேட்டு, உணர்ச்சி மயமாக்கினார்! இடையிலே ஒரு. கைச்சுவை:- "என். டி. சுந்தரவடிவேலுவைத் தமிழக
பக்கம்:தந்தை பெரியார்.pdf/551
தோற்றம்