உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

523 அரசின் கல்வித்துறை ஆலோசகராகப் போட்டு, இப்போது. தான் ஃபைலில் கையெழுத்திட்டு வருகிறேன்' என்று. அண்ணா பெரியார் காதில் கூறினார். பெரியார் உடனே பரபரப்புடன் எழுந்து, மைக் முன்பு வந்து, "ஒரு நல்ல சேதி..." என்று தொடங்கு முன்பு அண்ணா அவரை இழுத்து அமர்த்தி, ! இப்போது சொல்லி விடாதீர்கள். காரியம் கெட்டுப் போகும். இது ரகசியம்' என்றார். டெல்லி நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதா நிறைவேற்றப்பட்டது. வடநாட்டாருக்கு இருக்கிற மெஜா ரிட்டி பலத்தால்! மொழி பற்றிய பார்லிமெண்ட் திர்ப்பு' என்ற தலையங்கத்தில் 17-ந் தேதி பெரியார், 205 பேர் ஆதரித்தும் 41 பேர் எதிர்த்தும் ஆட்சி மொழி மசோதா நிறைவேறியிருக்கிறது. இது விஷயத்தில் தென்னக எம். பி.க் களின் தனித்த கூட்டத்தில் மெஜாரிட்டி பார்த்து, முடி வெடுக்கும் முறை கையாளப்படவேண்டும். இந்தி பேசும் பகுதியினர் மெஜாரிட்டியாக இருந்து கொண்டு இருக்கும். வரையில், நாம் நினைப்பது எதுவும் நடிக்காது! அதனால் இந்திய யூனியனில் இருப்பது நமக்குக் கேடு தரும் விஷயமே”-என்று குறிப்பிட்டார். காமராஜர்கூட மொழி மசோதாவால் விபரீதமே விளையும். நாடு பிரிய வழி வகுக் கும்' என்று எச்சரித்ததை விடுதலை முதல் பக்க பேனராக வெளியிட்டது 18.ந் தேதி. தலையங்கமும் ஆட்சி மொழி மசோதாவா? இந்தித் திணிப்பு மசோதாவா?” என்று எழுதிற்று. முதல் பக்கம் “தமிழ் நாடு தனிச் சுதந்திர நாடாக மாறினால் ஒழியத் தமிழர் தன்மானத் தோடு வாழ முடியாது. ஈ. வெ. ராமசாமி” என்றும், 3-ம். பக்கம் தோழர்களே காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை ஆசி நமக்கு இருக்கிறது. நமது நாடு முழுச் சுதந்தரம் அடைய சுதந்தரப் படையில் சேருங்கள்- ஈ. வெ. ரா.' என்றும் கட்டம் கட்டிய கொட்டை எழுத்து வாக்கியங்கள் பிரசுரமாயின. * ..., * × *: - .* காமராஜர் தலைவர் பதவியை நிஜலிங்கப்பாவுக்குத் தர இருப்பதாகச் செய்திகள் வந்தன. மாணவர் இந்தி