527 அதை எதிர்த்துப் போராடுவோம்’ என்றார் முதலமைச்சர் அண்ணா. - - • *. கழகப் பிரசாரத்திற்காகவும், சிங்கை-மலேசிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டதாலும், 25-12-67 அன்று பிற்பகல் 3-30க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட வீரமணி குடும் பத்தினர், இரவு 8-30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தபோது, தமிழ் முரசு' தமிழ வேள் கோ. சாரங்கபாணி அவர்களும், தோழர்களும் வரவேற்று, உபசரித்தனர். மறுநாள் காலை 11 மணிக்கு சிங்கப்பூரை விட்டு விமானத்தில் புறப்பட்டுப் பிற்பகல் 11மணிக்கு, ஈப்போ விமான நிலையம் சென்றடைந் தனர். அங்கே மர்க்கண்டைல் பிரஸ் உரிமையாளரான வீரமணியின் மைத்துனர் சந்திரனின் குடும்பத்தார், மற்றும் தமிழ்ப் பெரு மக்கள் திரண்டிருந்து வரவேற் றனர். ஒரு மாதகாலம் மலேசியாவில் தங்கிய வீரமணி, ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெரியாரின் கருத்துக்கனல் கமழச் செய்தார். - 2-1-68 அன்று சென்னை மவுண்ட்ரோடு ரவுண் டானாவில் சர் ஏ. ராமசாமி முதலியார், அண்ணா சிலையைத் திறந்து வைத்துத் திறமை மிக்கவர். தளராமல் உழைத்து முன்னேறியவர் அண்ணா' என்று புகழ்ந்து பாராட்டினார். 11-1.68 அன்று அதிகாலை 3-30 மணிக்குப் பூவாளுர் அ. பொன்னம்பலனார் சென்னைப் பொது மருத்துவமனையில் காலமானார். அன்னாரின் சடலம் பூவாளுர் கொண்டு செல்லப்பட்டு, அங்கே எரியூட்டப்_பெற்றது. நடிகவேள் எம். ஆர். ராதா, கோவை, சேலம் நகரங்களிலுள்ள சினிமா ஸ்டுடியோக்களில் மட்டும் நடிக்கலாம் என, ஜாமீன் தளர்த்தப்பட்டது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியாரால். இந்தியாவில் காங்கிரசல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழ் நாட்டின் தி.மு.க. ஆட்சியே சிறந்து விளங்கு வதாக, அய்தராபாத் ஆ. இ. கா. கமிட்டியில், தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் புகழ்ந்தாராம். நாடாளுமன்ற சபா நாயகர் நீலம் சஞ்சீவரெட்டி, மொழி மசேர்தரவில் தக்க மாறுதல்கள் தேவை என்ற கருத்தைத் தெரிவித்தார். அண்ணா, நாவலர், கலைஞர்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/556
தோற்றம்