உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

541 இருவரையும் பற்றி விவரம் தெரியாமல் விழிக்கிறோம்" என்றார் அண்ணா! 15-4-68 அன்று அண்ணா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வழியில் ரோமில் போப்பைச் சந்தித்தார். பாரீசில் டாக்டர் மால்க்கம் ஆதி சேஷய்யா, வாஷிங்டனில் ஊதாண்ட் ஆகியோரையும் சந்தித்தார் அண்ணா. யேல் பல்கலைக் கழகம் முதல் முறையாக அமெரிக்கரல்லாத ஒருவருக்கு - அண்ணாவுக்குச்-சப் , ஃபெல்லோஷிப் வழங்கிச் சிறப்படைந்தது. திரும்பி வரும் போது ஜப்பானில் சேலம் இரும்பாலை பற்றியும் அண்ணா பேச்சு நடத்திவிட்டு வந்தார். 14-4-68ல் பெரியார் அறிவிப்புக்கிணங்க, சென்னையில் பெரியார் திடலில், டெல்லி ஆதிக்கக் கண்டனநாள் பொதுக் கூட்டத்தில் பெரியார் முழங்கினார். தமிழர் மான வாழ்வுக்காக சுதந்திரத் தமிழ்நாடு பெற்றே தீருவோம். 3,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள டெல்லிக்கு நாம் ஏன் அடிமையாயிருக்க வேண்டும்? நாங்கள் என்ன, போரில் அடிமைப்பட்ட கைதிகளா?' என்று கேட்டார் . பெரியார், தமிழகம் எங்கனும் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்கள் (ஆங்கில வாசகமும் முன்பே "விடுதலை'யில் தரப்பட்டிருந்தது) டெல்லியில் குடிஅரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், சென்னை விடுதலை’ அலுவலகம், இங்கெல்லாம் குவிந்தன என்ற செய்தி. "விடுதலை ஏட்டின் நாலாம் பக்கத்தை, அந்த மாதம் முழுதும் நிறைத்தது. பெரியார் உடல்நிலை சுற்றுப் பயணத்துக்குத் தகுதியற்றதாக இருந்ததால், தோழர்கள் அழைக்காதிருக்க வேண்டுகோள் விடப்பட்டது. எம். ஆர். ராதா வழக்கு அப்பீலில் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு அவருக்குப் பாதகமாக அமைந்ததால், சுப்ரீம் கோர்ட் செல்லவிருப்பதாகச் செய்தி வெளியானது. 17-11-1951 கரண்ட்’ இதழில் ஆசிரியர் கரகா, ஒரு செய்தி தெரிவித்திருந்தார் இராஜாஜி பற்றி, மைசூர் ஜட்ஜ். மேடப்பாவைக் கொல்ல முயன்ற சதி வழக்கில், சம்பந்தப் பட்டதாக, எஸ். எஸ். ராஜா என்ற பார்ப்பன வக்கீல்.