549 படைத்த மக்கள், ஆரியப் பத்திரிகைகளைப் பேனா முனை யால் தாக்கத் தொடங்கினர். இன்னொரு பேரிடியாகப் பழைமையாளர் மீது வீழ்ந்தது அரசாணை ஒன்று! இதை 'யும் "இந்து'விலிருந்துத்ான் :விடுதலை’ சேகரித்தது. அதாவது, அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டி வைக்கக்கூடாது என்பதே அது. இதுவும் அடுத்து வந்த நாட்களில் பெரிய கருத்து மோதலை ஏற்படுத்திற்று! அடுத்த அக்டோபர் 2 முதல் கலப்பு மணத் தம்பதியர்க்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுமென அமைச்சர் சத்தியவாணி முத்துவால் அறிவிக்கப்பட்டது. - - அரூரில் 42-7-68 அன்று இரவு, பெரியார் 89-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், எச். எல். முருகேசன் தலைமையில் பெரியார், முதல்வர் அண்ணா வுக்குப் பொன்னாடை போர்த்தினார். மாண்புமிகு அறிஞர் அண்ணா பெரியாரைப் பாராட்டிப் பேசினார்:'பெரியாரவர்கள் மூலம் நாம் பெற்றிருக்கிற பகுத்தறிவுக்கு, நல்லறிவுக்கு நன்றிக் கடனைச் செலுத்துவதற்கு நாம் கூடி .பிருக்கிறோம். தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்த தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பார்ப்பன சமுதாயத்திற்குப் பெரியார் செய்திருந்தாரானால், அவரைக் கடவுள் அவதாரமாக்கி, சங்கராச்சாரியாரைவிட அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, மிகப் பெரியவராக்கி இருப்பார்கள். ஈரோட்டுக்கருகிலுள்ள ஈங்கூரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந் தார். கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், பெரிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, அதிலிருந்த சாம்பலை அள்ளி அள்ளிக் காற்று வீசிய பக்கம் அதைத் துரவிவிட்டார். அந்தச் சாம்பல் தூளானது பெரியாரவர்களின் மேல் பட்டது. அதைப்பற்றியெல்லாம் லட்சியம் செய்யாது, பெரியார் பேசி முடித்தார். அடுத்து, நான் பேச ஆரம் பித்ததும், சொன்னேன்:- பெரியவரே! நீங்கள் 30, 40 வருடங்களுக்கு முன் இதுபோல் செய்திருந்தால், பெரியாரின் கருமை நிறமான தாடி உங்கள் சாம்பல் பட்டு வெள்ளை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/578
தோற்றம்