552 கொடிகளும், ஒரே அளவுதான்; இரண்டிலும் நிறம் கருப்பும் சிவப்பும்தான்! தந்தை பெரியாரவர்கள் சமுதாய மாற்றத்தைக் காணப் பாடுபடுகிறார்கள். சமுதாயமும் மாறி இந்த ஆட்சியும் இருந்து செயல்பட்டால், சுதியோடு சேர்ந்த இசையாக அமையும்; இல்லாவிடில் அபகரமாகத் தானிருக்கும்! - எனக்கு முதல்முதல் நகரசபை வரவேற்புத் தர, ஈரோட்டில் ஏற்பாடு செய்தவரே பெரியார்தான். என்னை ஊர்வலத்தில் அமர வைத்துத், தான் நடந்தே வந்தார்கள் (1948ல்). இன்று அதே பெரியாரே, எனக்குப் பொன்னாடை யும் போர்த்தினார்கள். நான் ஈரோட்டில் அவர் வீட்டில் தங்கியிருந்தபோது, இரவில் வெகுநேரம் கழித்துப் படுக்கச் செல்வதால், காலையில் கண் விழிக்காமல், அதிக நேரம் துரங்குவேன். அவர் அதிகாலையில் எழுந்தவுடன், என்னைத் தாண்டித்தான் செல்லவேண்டும். சில சமயங் களில், நான் அணிந்திருக்கும் துணிகள் விலகி இருக்கும். அப்போதெல்லாம் அவர், தான் மேலே போட்டிருக்கிற சால்வையை எடுத்து, என்மீது போர்த்திவிட்டுப் போவார். அதைவிட இந்தப் பொன்னாடை எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை! - என்றையதினம் நான் சுயமரியாதைக் கருத்துகளை ஏற்றுக் கொண்டேனோ, அன்றிலிருந்து இன்றுவரை, நான் சுயமரியாதைக்காரனாகத்தான் நடந்து வருகிறேன்i’’ என்று பேசிவிட்டு அண்ணா அவர்கள், பெரியார் தனக்குப் போர்த்திய பொன்னாடையை, அரூர் முத்துவிடம் 500 ரூபாய்க்குத் தந்து, அந்தத் தொகையைப், பெரியாரிடம் கார் நிதிக்காக வழங்கினார், அதே மேடையில்! சென்னை மாநில சுயாட்சிக் கருத்தரங்கு 20-7-68-ல் நடைபெற்றது. அண்ணா பங்கு கொண்டு, மத்திய அரசின் கையில் அநாவசியமான, தேவையற்ற ஏராளமான அதிகாரங்கள் குவிந்துகிடக்கின்றன. பாதுகாப்பு, போக்கு வரத்து, நாணயச் செலாவணி தவிர மற்றவற்றை மாநிலங் களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்!” என்றார். பெரியாரின்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/581
தோற்றம்