555 . முடியும்? பாரதிதாசன் கவிதைகள் பாடங்களில் நிறைய. இடம் பெறுமாறு, கல்வி இலாக்காவைச் சீர்திருத்த வேண்டும். எனக்கப்புறம் இந்த விஷயங்களைச் சொல்லவும்: ஆளில்லை. தி.மு.க.வுக்கு அப்புறம், இதைச் செய்யவும் ஆட்சியில்லை. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்களை அவர்களாகவே அகற்றி விடாவிட்டால், நானும் எனது தோழர்களுமே, புகுந்து நீக்குவோம். ... " அதேபோல் தெருவோரம், அலுவலக வளைவு இங்கெல் லாம் பார்ப்பான் ஆதரவுடன் கோயில்கள் முளைக்கின்றன. தமிழர்கள் கோர்ட்டுக்குச் சென்றாவது இவற்றைத் தடுக்க வேண்டும்.’’ (திருவரங்கத்தில் 4-8-68 அன்று இம்மாதிரி, ஒரு தடையுத்தரவைத் திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம் பெற்றது) என்பன சில கருத்துகள். 7-8-68 பத்திரிகை நிருபர்களிடையே அரசு அலுவலகங்களில் கடவுளர் படம் அகற்றும் பிரச்சினையில் பதில் கூற வேண்டியவர் அலுவலர் களே தவிர, அரசியல் வாதிகளுக்கு இதிலேன் அக்கறை?’’ என்று கேட்டார் முதலமைச்சர் அண்ணா, , காங்கிரஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள், அவர்களின் தீண்டாமை ஒழிப்பு கபட நாடகமே” என்ப தைப் பெரியார் சான்றுடன் எழுதினார். பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித் தல்-திண்டாமைபோன்றவற்றை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று, திடீர் ஞானோதயம் உண்டானவர், போல், சி. சுப்ரமணியம் கூறுகிறார். இவர்தான் சங்கராச் சாரியார் காலில் விழுந்து, பூமியை முத்தமிட்டு வணங்கித், தனக்கு மந்திரி பதவி கிடைக்குமாறு ஆசி கோரியவர் . மேலும், இவரது தலைவரும் குருவுமான ஆச்சாரியார் சங்கதி என்ன தெரியுமா? ராஜாஜி யாரையும் தொடுவார், யார் வீட்டிலும் சாப்பிடுவார், யாருக்கும் பெண் கொடுப் பார், ஆனால் ஜாதி ஒழியச் சம்மதிக்கமாட்டார்! தான் பிராமணன், மற்றவர் சூத்திரர் என்பதைச் சொல்லி, ஜாதி தர்மத்தைக் காப்போம் என்பார். 1963 க்குப் பிறகு காமராஜர் தொடர்பு தமிழ் நாட்டில் , இல்லாமல் போய்விட்டது. காமராஜர் இல்லையென்றால்,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/584
தோற்றம்