உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 காங்கிரஸ் அநாமதேயந்தான். கல்விக் கண்கொடுத்ததற்குப் பரிசாக இன்று காமராஜரையே குறை சொல்கிறார்கள். அவரும் நமது பொது எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவர் காலத்தில் காங்கிரசுக்குப் பெருமை குறையாதிருக்க, அவர் சார்புள்ள பத்திரிகைகளை அடக்கிட வேண்டும்” என்று பெரியார், விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ; இவ்வாறும் எழுதினார். ஆகஸ்டு மாதம், நிறையத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பெரியார், பெண்கள் முன்னேற்றத்துக் கான அறிவுரைகளை வழக்கம் போல் வழங்கினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசிகள் ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சட்ட மன்றத்தில் பேசியபோது, சத்தியமூர்த்தி அய்யர் அதை எதிர்த்து, அப்படியானால் கடவுளுக்கு சேவை செய்ய தேவதாசிகள் வேண்டுமே என்ன செய்வது?" என்று கேட்க, எங்கள் சமூகத்தார் ஆண்டாண்டு கால மாய்ப் பொட்டுக் கட்டியிருந்தோம். இனிமேல் அந்த வேலையை உங்கள் சமூகத்துப் பெண்கள் செய்தால் தெய்வ சேவையாயிருக்குமே” என்றாராம். அந்தப் பொட்டுக் கட்டும் வழக்கம் சட்ட விரோதமாக்கப்பட்டது போல், பெண்களுக்கு இப்போது தாலி கட்டுகின்ற வழக்கமும் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும் என்றார் பெரியார். தந்தை பெரியார் உடல்நலங் குன்றியிருக்கிறார்கள். எனவே ஏற்கனவே ஒப்புதல் தந்துள்ள நிகழ்ச்சிகள் தவிரப் புது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாதிருப்பதால், தோழர்கள் அழைக்காதிருக்கக் கேட்டுக் கொள்ளும் அறி விப்பு, 27-8-68 அன்று பிரசுரமாயிற்று. அண்ணாவும் தளர்வு உற்றிருப்பதால் தர்மபுரியில் பெரியார் சிலை திறப்பு விழா 30.8-08 அன்று நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்ட தாக, என். எஸ். சம்பந்தம் செய்தி அறிவித்தார். இங்கிலீஷ் நமக்கு மிக மிக அவசியம், அதைப் புறக்கணித்தால் நமது முன்னேற்றமே தடைபடும் என்று மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் அண்ணா கருத்துரைத்தார். லாட்டரி சீட்டு