உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 என்பதை மக்கள் புரிந்துகொண்டதாகவும், நீண்டநாளாகப் பெரியாரின் இயக்கம் செய்த பிரச்சாரமும் உதவியாக இருக் ஒறது என்றும், சுகாதார அமைச்சர் சாதிக்பாஷா கூறினார். அமெரிக்காவில் மருத்துவமனையிலிருந்த அண்ணாவின் அன்றாட நிலவரம் குறித்து, மகிழ்ச்சி தரும் செய்திகள், தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி, 21-ந்தேதியும்,துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய் 28-ந் தேதியும் நியூயார்க்கில் அண்ணாவைக் கண்டு நலம் விசாரித்தனர். இந்தியாவின் அய்.நா சபைப்பிரதிநிதி ஜி. பார்த்தசாரதி, நல்ல துணையாக இருந்து வந்தார். ரூ 1.50 விலையில் வெளியிடப்பட்ட பெரியார் 90-வது பிறந்தநாள் மலரில், பெரியாரே பத்து கட்டுரைகள் வரைந் திருந்தார். அதில் 'எனது நிலை’ என்னுந் தலைப்பில் எழுதும்போது, ஒருவித சலிப்பு உணர்வுடன், நான் துறவி யாய்ப் போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாகிறது, என்பதாகக் குறிப்பிட்டிருந்தார் பெரியார். r கரூரில் பெரியாருக்கு நகரும் குடில்’’ வழங்கும் விழா அக்டோபர் 6-ம் நாள் நடைபெறும் என்றும், குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் காரை வழங்குவார்; மதியழகன் பொன்னாடைபோர்த்திப் பொற்கிழி அளிப் பார்; பெரியார் அறிவுரை நல்குவார்; அன்பில் தர்மலிங்கம், ஆசைத்தம்பி, திருவாரூர் தங்கராசு, வீரமணி ஆகியோர் பங்கேற்பர் என்றும் செய்தி வெளியிடப்புட்டது. மத்திய சுகாதாரக் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் தலைசிறந்த மனிதாபிமானி பெரியார் ஈ. வெ. ராமசாமி, சீர்மிகுந்த எழுத்தாளர், தேர்ந்த பகுத் தறிவுவாதி, அயராது பாடுபடும் உயர்ந்த பேச்சாளர்' என்று பெரியாரைப் புகழ்ந்துரைத்தார். சென்னைப் பல்கலைக் கழகப் பட்டம்ளிப்பு விழா உரை நிகழ்த்திய கஜேந்திர கட்கார் மாணவர்களை நோக்கி சாதிகளை ஒழித்திட முன்வாருங்கள் பகுத்தறிவுக் கொள்கைகளை இணைத்து, நவீன விஞ்ஞான முறைகளில் கருத்தைச் செலுத்துங்கள். பழைமையில் ஊறிக்கிடக்கும் நமது சமுதா