561 யத்தைப் புதுமையைக் கையாளும் நவீன சமுதாயமாக மாற்றுங்கள்’ என்று பேசியது, பெரியாரின் எதிரொலி யாகவே தோன்றியது. - பெரியாரின் 90-வது ஆண்டு பிறந்தநாள் செய்தி சுருக்க மாகவே இருந்தது:-'சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த வர்களும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க. விலும், காங்கிரசிலும் உள்ளவர்களும்-அரசில் அதிகாரி களாய், குமாஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர் களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும், தங்கள் தங்கள் வீட்டில், தொழில்மனைகளில், வாகனங்களில் உள்ள கடவுள், மத, புராண, இதிகாசக்கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப் படங்கள் எவையானாலும், அவற்றை அப்புறப்படுத்திவிடவேண்டும்! கண்டிப்பாய் அப்புறப்படுத்தி விடவேண்டும் என்று மிக்க மரியாதையாய், வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறேன். அரசாங்கப் பணிமனைகளில் தொங்கும் படங்களை எடுத்துவிடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர் களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது? நீங்கள்தான் பார்த் தீர்களே, இராஜாஜி மிரட்டுகிறார். மித்திரன்', 'தினமணி', * இந்து', 'மெயில்', எக்ஸ்பிரஸ் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் மிரட்டுகின்றன; விஷமப் பிரச்சாரங்கள் செய் கின்றன? இந்த ஒரு பிரச்சினையைக்கொண்டே தி.மு.க. ஆட்சியையே கவிழ்க்கப்.பார்க்கின்றனர். ஏன்? தங்கள் சாதி உயர்வும், நம் சாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர் வாழ்கின்றன. அவை (படங்கள்) போய்விட்டால், உயர்வு-தாழ்வு போய்விடுமே என்கிற கவலைதானே? மற்றபடி, அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள். நமக்கு புத்தி, மான, ஈன, உணர்ச்சி இருக்கவேண் டாமா? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து எறியாவிட்டாலும், நமது ஈனநிலை, பெ.-36 -
பக்கம்:தந்தை பெரியார்.pdf/590
தோற்றம்