உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 இழிவுநிலை, பார்ப்பான் உயர்வுநிலை அதில் இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது அரசுப் பணிமனைகளி ‘லிருந்தும், அதைவிட நமது வீடுகளிலிருந்தும், தொழில் ஸ்தாபனங்களிலிருந்தும், எடுத்து எறியவேண்டாமா என்று கேட்கிறேன். தோழர்களே! இனியாவது நீங்கள் இழிசாதி மக்கள் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாமா? உங்கள் தாயார்சகோதரி மனைவிமகள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி காமக்கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆகவேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாமா? நான் 45 ஆண்டு களாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இதற்காக வாவது (இந்தப் படங்களை அப்புறப்படுத்தவாவது) பயன் பட்டது என்று இருக்க வேண்டாமா? . நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும்படிச் செய்தீர்கள் ஆனால், பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நானும் இனியும் (90 க்கு மேல்) வாழமுடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடு வார்கள்? எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய் வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குதான் போகவேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள்; செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இது கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்ற வருக்குப் படித்துக் காட்டுங்கள்!'-எப்படி? எதிரில் உட்கார்ந்து நம்மிடம் பேசுவது போல் இல்லையா? 19.9-ல் அன்று பெரியார் வாலாஜாபாத் கூட்டத்தில் "மக்களுக்கு அறிவிருந்தால் தங்களை இழிவு படுத்தும் கோயில்களைத் தரைமட்டமாக்கி இருக்கமாட்டார்களா? நம்மை நிரந்தரமாய் இழிமக்களாகவே வைத்திருக்கத்தானே கோயில்கள் இருந்து வருகின்றன!' என்று பேசினார். அதே நாளிட்ட விடுதலை’ தலையங்கப் பகுதியில் எனது கொள்கை, ஆதரவு மாற்றத்திற்குக் காரணம்’ என்ற