உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

563 தலைப்பில் எனது ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக் கூடாது-இந்த மூன்றுதான் எனது கொள்கை. பல கட்சிகளை எதிர்த்ததும், பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனியும் எந்தக் கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ தெரியாது'-என்று எழுதி முடித்தபின், அடியில் குறிப்பு என்று போட்டு, இந்த மூன்றுக்கும் தி. மு. க. எதிரியானால் என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்லமுடியாது’ எனவும் எச்சரிக்கை போல எழுதியிருந்தார் பெரியார். இந்தியா சுதந்தரம் பெற்றது 15-8-1947. இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது 7-12-1947, காந்தியார் கொல்லப்பட்டது 30-1-1948 முன்னது நடை பெற்ற 165-வது நாள், பின்னது அறிவிக்கப்பட்ட 53-வது நாள், காந்தியார் கொல்லப்பட்டுவிட்டார். ஏன் தெரியுமா? சுதந்தரத்துக்குப் பின் பார்ப்பனர் நடத்தையைப் பார்த்து காந்தியும் சு. ம. ஆகிவிட்டார்; அதனால்தான் தீர்த்துக் கட்டிவிட்டார்கள்-எனப் பெரியார் பெட்டிச் செய்திபோல ஒரு புள்ளிவிவரம் தந்து சிந்தனையைத் துாண்டிவிட்டார்! 20-9-1968 வேலூரில் எம்.ஜி. ஆர். மன்றத்தின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசினார். எம்ஜியாரின் நூறாவது பட நிறைவு விழாவாகவும் இது நடைபெற்றது. நான் தோற்றுவிட்டேன், பார்ப்பான் வெற்றி பெற்றுவிட்டான்; என்றாலும் கழகத்தோழர்கள் அவசரப்பட வேண்டாம்; இவர்களை ஒழிக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள்-என்று 1967-ல் தி. மு. க. மகத்தான வெற்றி பெற்றவுடனே சொன்னேன். சொன்ன வண்ணம் நான் பெரிய போராட்டம் துவக்குவேன் என்று எதிர்பார்த்த தி. க. தோழர்கள் ஏமாந்தார்கள். காரணம், கிடைத்தற் கரிய நிதியாக அண்ணா நமக்கு வாய்த்துவிட்டார். பகுத் தறிவோடு காரியங்களைச் செய்து வருகிறார். அதே போலக் கலைத் துறையிலும் எம். ஜி. ஆர். அவர்கள் ஒரு