570 அங்கலாய்க்கிறார். ஜாரமே வந்துவிட்டது இவருக்கு? ஆனால் நமது கருத்து அவர்மத்திய மந்திரியாவதால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் லாபமில்லை. அவருடைய உழைப்பு தமிழ் நாட்டுக்குத்தான் தேவை” என்று பெரியார் தமது எண்ணத்தை இயம்பினார். தமிழர் நிலை மாறவேண்டு. மானால் நம்மைக் கைதுக்கி விடுவதற்கு ஏற்ற மாதிரிக் கலைகள் நம்மிடமில்லை. நம்முடைய கல்வியில் பகுத்தறி. வுக் கருத்துகளைப் புகுத்த வழியில்லை. கிராம உத்தி யோகஸ்தர்களும் போலீஸின் அடிமட்டத்துச் சேவகர்களும், தாழ்த்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட வேண்டும். அய்க்கோர்ட் ஜட்ஜ்களை வக்கீல்களிலிருந்து தேர்ந்தெடுக் கக்கூடாது. படிப்படியாக உயர்வு பெற்றுத்தான் வர வேண்டும். நேரடியாக அய். ஏ. எஸ். அதிகாரிகளை நியமிக்கக்கூடாது. அதுவும் ரெவின்யூ இலாகாவின் கீழ் நிலையிலிருந்து பதவி உயர்வு தரவேண்டும். எல்லா நிலை யிலும், கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் ஆக்கப்பட வேண்டும். இவையெல்லாந்தான் உண்மையான முன்னேற். றத்துக்கு வழிகளாகும். துருக்கி நாடு பழைமைப் பிடிப்பில் சிக்கிக் கிடந்தபோது எப்படி இருந்தது? கமால்பாட்சாவின் புரட்சிகரமான சீர்திருத்தம், அய்ரோப்பியரோடு வித்தி யாசம் காண முடியாதபடி துருக்கியரை நாகரிகப்படுத்தி விட்டது. அதே போல நமது பிள்ளைகளையும் இளமையி லிருந்தே பழக்க வேண்டும். தமிழில் பேசக்கூடாது. கையால் சாப்பிடக்கூடாது. வேட்டி சட்டை புடவை எல்லாம் மாற்றி, ஆங்கிலேய முறை உடை உணவு மொழி ஆகிய வற்றுக்கு மாறுதல் செய்யப்படவேண்டும்” என்றெல்லாம் நவீனக் கருத்துகளைப் பெரியார் வலியுறுத்தினார். 'மதுவிலக்கு என்பது இமயமலை அளவு முட்டாள் தனம். காந்தியாரின் காட்டுமிராண்டித்தனமான கொள்கை களில், வெற்றி பெறாத ஒன்றாகும் இது. மது விலக் கால் எந்தப் பயனும் கிடையாது. இதனால் தொழிலாளரின் தேசிய சக்தி (Energy) தான் குறைந்து போய்விட்டது. கருங்கிரஸ்காரர்களைக் கெடுத்துப் பதவியிலிருந்து விரட்டி
பக்கம்:தந்தை பெரியார்.pdf/599
தோற்றம்