572 பாங்க் தலைவர் மக்னமாரா தமிழ் நாடு அரசின் சிறந்த நிர்வாகத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார். டெல்லி மக்களவையில் தமிழ் நாடு’ பெயர் சூட்டும் தீர்மானம் வெற்றியுடன் மலர்ந்தது. அண்ணா வாரந்தோறும் சனி ஞாயிறுகிழமைகளில் காஞ்சியில் தங்கி ஒய்வெடுத்து வந்தார். வேலூர் நாராயணன் சென்னை மாநகர மேயரானார். நடைபாதைக் கோயில்களை அகற்று வதென அவர் உறுதி பூண்டார். மிரட்டல் கடிதங்கள், காகிதப் புவிகளின் கதறல்களை அவர் பொருட்படுத்த வில்லை! திருச்சியில் நவம்பர் 15-ம் நாள் கி. ஆ. பெ. விசுவநாதம் 70-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் பெரியார் பங் கேற்றார். சி. சுப்ரமணியம் அவர்களின் மகள் அருணாட -ஈரோடு டாக்டரும் பெரியாரின் அன்பருமான எல். கே. முத்துசாமி அவர்களின் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம், 24-11-68 அன்று சென்னை ஆபட்ஸ்பரியில் நடை பெற்றபோது, பெரியார் சென்றிருந்தார். காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோர் பெரியாரிடம் வந்து, வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்தனர். அடுத்த நாள் விடுதலை’ -யில் பெரியார் கூலிக்காகவும் வரும்படிக்காகவும் காங்கிர சில் இருக்கிறவர்கள் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசைக் கைகழுவிவிட்டு வெளியே வாருங்கள்! காங்கிரஸ் பத்திரி கைகள் என்பவைகளை உங்கள் கைகளாலும் தொடா தீர்கள்! எவ்வளவு மோசமான தமிழன் ஆனாலும் தமிழன் என்கிற உணர்வு கொள்ளுங்கள்' என்று வேண்டினார். இதற்கு முன்னதாகச் சேத்தியாதோப்பு பொதுக் கூட்டம் ஒன்றில் "அரசு அலுவலகங்களிலுள்ள கடவுள் பட நீக்கக் கிளர்ச்சி ஒன்று நடத்த இருக்கிறேன். உருவமில்லாதவர் கடவுள் என்று சொல்லிக்கொண்டே, பலவிதப் படங்களை மாட்டித் தொங்கவிடும் மடமையை ஒழிக்கப் பெருவாரி யாகக் கிளர்ச்சியில் ஈடுபட முன் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்தார் பெரியார். தமிழ் நாடு பெயர் மாற்ற வெற்றி விழாக் கூட்ட தில் ே 1-12-1968 ് ಘೀ ప్రోఫీ
பக்கம்:தந்தை பெரியார்.pdf/601
தோற்றம்