573 மாதமாகப் பேசவிடாமல் உடல் நலிவு தடுத்ததல்லவா? அன்றுங்கூடப் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டா மென்றுதான் மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். 'இன்றைய தினம் நான் பேசுவதால், என் உடலுக்கு ஊறு நேரிடுமானால், இந்த உடலிருந்து எனக்கு என்ன பயன்?’ என்று கேட்டுவிட்டு அண்ணா, தமது அரசின் மாற்றிட முடியாத முப்பெரும் சாதனைகளைக் குறிப் பிட்டார். பள்ளிகளில் இந்தியை ஒழித்தது; சுயமரி யாதைத் திருமணச் சட்டம்; தமிழ் நாடு பெயர் மாற்றம் ஆகியவை. ஆனால் பெரியார் என்ன கருதினார், தமிழ் நாடு பெயர் மாற்றம் பற்றி? 6-ந் தேதி தலையங்கம்-இந்தப் பிரச்சினை வெற்றி பெற்றதற்கு அண்ணாவின் ஆட்சிதான் காரணம். ஆனால் தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படியிருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்துவிட்டான், என்பது போலத்தான் இருக்கிறது. ஆசாமிக்குக் கண் பொட்டை தான்; என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பது போல் தோன்றுகிறது எனக்கு. இப்போதும், டில்லி ஆட்சி இந்தப் பெயர் மாற்றத்தை மறுத்திருந்தால் நம் கதி என்ன? ராஜிநாமா செய்வோம். அது நமது பலவீனத்தைத்தானே காட்டுகிறது? எப்படியானாலும், இது மற்ற கட்சியாரால் செய்து முடித்திருக்க இயலாது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! ஆயினும், இதற்கு அண்ணாதுரை நாடு’ என்பதாகப் பெயர் மாறினாலும், தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்றமடையுமா?’ என்று வினவியது! பூரிசங்கராச்சாரியாரின் திமிர்வாதத்துக்கு உதாரண மாக அவரே எழுதிய வாசகம் ஒன்று இதோ:“சூத்திரர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் நாட்டுப் பற்றாளர் அல்லர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களால், சமைக்கப்பட்ட உணவை உண்ணுகின்ற மற்றவர்கள்சமைத்தவர்யாரென்பதைப் பற்றியே கவலை கொள்ளா மல் தின்றுவிடுகின்ற நாய், பூனை, போன்ற விலங்கு களுக்கு ஒப்பானவர்கள்!' இந்த எழுத்துக்காக அவர்மீது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/602
தோற்றம்