577 1,21,236. இருந்தாலும், காங்கிரசைவிட தி. மு. க. பெரிய கட்சிதான்! அவர்களுடைய கெட்ட வாய்ப்பாக இப்போது இருந்து வருவது இராஜாஜியின் சம்பந்தம்தான். இது எப்படி என்றால் ஒரு படி அரிசியும் ஒரு படி உமியும் ஒன்றாய்க் கலந்து, உமியைப் புடைத்து ஊதித்தள்ளி, மீதியைச் சாப்பிடுவது போன்றதாகும். இதில் இப்போது எனக்குள்ள கவலை, நடக்க இருக்கும் நகரசபைத் தேர்தல் களிலும் தி. மு. க. வைப் பாதிக்குமே என்பதுதான். ஆகை யால் அண்ணா அவர்கள் இதற்குப் பிராயச் சித்தம் தேடித், தோல்வியைச் சமாளிக்கவேண்டும். என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் எப்போதும் தமிழராகவே இருப்பார் என்பதில் நம்பிக்கை உண்டு, 18-ந் தேதி விருதுநகரில் காமராஜரின் அன்னை சிவகாம் அம்மையார் மரணம் அடைந்தார். அண்ணா அனுதாபச் செய்தி அனுப்பினார். விடுதலை’ துணைத்தலையங்கம் தீட்டியது. அண்ணாவின் உடல் நலம் நாள்தோறும் சீர்கேடு அடைந்து கொண்டே வந்தது. ஏ. கோவிந்தசாமி இருந்து வந்த திருவரங்கம் என்ற இல்லம், குளிர்சாதன வசதியுடன் திருத்தி அமைக்கப்பட்டது. அங்கு செல்ல விரும்பாமல் அண்ணா துங்கம்பாக்கம் சொந்த வீட்டி லேயே இருந்தார். உணவு ஒரு பருக்கையும் உட் செல்லவில்லை. வேலூர் செல்ல ஏற்பாடுகள் நடந்தன. அண்ணா புறப்படுந் தறுவாயில் மறுத்துவிட்ட்ார். உடனே டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் அடை யாறு கான்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. 20-1-1969 அன்று, சிங்க ஏறுபோல் விறுவிறுப் புடன் நடந்த சென்று, தமது அறையில் நுழைந்தார். மருத்துவ நிபுணர் குழு அமைக்கப் பட்டது. அமெரிக்க மருத்துவர் டாக்டர் மில்லர் அழைக்கப்பட்டார். (இரகசியமாக வைத்திருந்த இக்செய்தியைச் செழியனே அண்ணாவுக்குத் தெரியச் செய்துவிட்டார்) பம்பாயி விருந்து டாக்டர் பேமாஸ்டர், டாக்டர் ஜகாவாலா வந்தனர். வேலூரிலிருந்தும் மருத்துவர்கள் வந்தனர். உணவுக் குழலில் பழைய நோயின் அறிகுறி மீண்டும் தென்படுவதாக அறிவித்தனர். அமெரிக்காவிலிருந்து பெ.-37
பக்கம்:தந்தை பெரியார்.pdf/606
தோற்றம்