579 பெரியார், அடையாறுப் பகுதியிலேயே, வீரமணியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு, நாள் தோறும் கவலை தேங்கிய முகத்துடன் வந்து போனார். 31-1-69 கவலைக்கிடம் நீடிக்கிறது. 1.2.1969 நம்பிக்கை தென்படுகிறது. 2-2-69 டாக்டர்கள் போராடி வருகின் றனர். காலை முதல் மருத்துவமனையிலிருந்த பெரியார், வீரமணியின் இல்லம் சென்றார்; நள்ளிரவில்! அதே நள்ளிரவு! மணி 12-40. அந்தோ! பேரிடி, பூகம்பம், பிரளயம்! என். எஸ். சம்பந்தம் பெரியாரை அழைத்து, அண்ணாவின் மறைவு குறித்துச் சொன்னார். திடுக்கிட்டெழுந்து பெரியார் தம் வலது கையால் ஓங்கிச் சுவரில் அறைந்து அறைந்து, 'போச்சு போச்சு. எல்லாம் போச்சு!’ என்று கதறினார். உடனே மணியம்மையாருடன் வேனில் ஏறிப் புறப்பட்டு, அடையாறு மருத்துவமனை சேர்ந்தனர். அண்ணாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற, எடுத்து வந்தனர். தந்தை தனயனை வெறிச்சென்று பார்த்தார். அய்யா நாங்கள். அநாதையாகிவிட்டோமே!’ என்று கலைஞர் பெரியாரைக் கட்டிக்கொண்டு அழுதார். ஏ. கோவிந்தசாமியும் அலறித் துடித்தழுதார். மக்கள் வெள்ளம் கண்ணிர் வெள்ளத்தில் மறைந்தது! •r - 3ந்தேதி காலை 11 மணியளவில் கையில் ஒரு மலர் வளையத்துடன் பெரியார், அண்ணாவின் சடலம் வைக்கப் பட்டிருந்த ராஜாஜி மண்டபத்துக்குள் செல்ல முனைந்தார். அன்று சென்னை மாநகரத்தில் காணப்பட்ட ஈடு இணையில் லாச் சோகச்சூழ்நிலையில் அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. என்வே மலர் வளையத்தை ராஜாராமிடம் தந்துவிட்டுப் பெரியார் திரும்பிச் செல்ல நேரிட்டது. - - நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய, பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவம் ஆகும்' என்று-உடனடிச் செய்தியாகப், பெரியா ரால் இவ்வளவுதான் சொல்லமுடிந்தது 3-2-59 “விடுதலை’’
பக்கம்:தந்தை பெரியார்.pdf/608
தோற்றம்