உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

583 தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் அன்பு கிாட்டிப் பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக், கொள்ளுகிறேன்.” 4-2-69 இரவு 8 மணிக்கு இது ஒலிபரப்பா கியது. மக்கள் கூட்டம் 15 லட்சம் பேர் என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார். அண்ணா இயற்கை எய்தியவுடனே, நுங்கம்பாக்கம் இல்லத்துக்குச் சடலம் கொண்டு செல்லப்பட்டது. கூட்டம் சமாளிக்க முடியாமல் போகவே, விடியற் காலையில் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் இறுதி மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர், அரசு சம்பிரதாயப் படி நாவலரைத் தற்காலிக முதல்வராக நியமித்து, அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இரவிலேயே ஆளுநர் மாளிகையில் 1-15 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சர்தார் உஜ்ஜல் சிங், அவரது துணைவியார் இருவருமே அண்ணாவிடம் அளவிடற் கரிய அன்பும் மரியாதையும் காட்டி வந்தவர்கள்! அண்ணாவை ஒருமுறை கண்டுவிட வேண்டுமென்ற ஆர்வமேலீட்டால், தமிழகமே, கிடைக்கின்ற வாகனங் களிலெல்லாம் ஏறிச் சென்னை நோக்கித் திரண்டது. மாநகரின் மக்களிலே 95 சதவீதம் பேராவது, நேரில் கண்டு செல்ல வந்தனர். இந்திய வரலாற்றிலேயே யாருடைய மறைவுக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதுமில்லை; திரண்டவர் அனைவருமே கதறி அழுத்துமில்லை; இதற்கு முன்னும், பின்னும்! அண்ணா மறைந்தார் என்ற சேதி கேட்டுப் பலர் மாரடைப்பால் மறைந்தனர். ரயில் கூரை மீது ஏறிவந்து, அறியாமை யால் பாலத்தில் சிக்குண்டு, சிதம்பரம் அருகில் மாண்டவர் பலபேர். ராஜாஜி ஹாலில் உடலைக் கண்டு அங்கேயே மாரடைத்து மாண்டவர் சிலபேர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், ஏறியும், குதித்தும், தாண்டியும், மிதிபட்டும், சிக்கியும், நசுக்குண்டும், சிதைந்தவர் பல்லாயிரம் பேர் ராஜாஜி ஹாலின் உட் புறம் வைத்துச் சமாளிக்க முடியாமல், காமராஜர் யோசனையின்படி, வெளியிலே படிக்கட்டு மீது, சிறிது நேரம் வைத்துக் காண்பிக்கப் பட்டது. -