உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

585 நான் கண்ட மிகப் பெரிய கூட்டம், ரஷ்யாவில் Red Square (ரெட்ஸ்கொயர்) செஞ்சதுக்கம் என்னும் இடத்தில் மேதினம் கொண்டாடுவதற்காகக் கூடும் 10லட்சம் மக்களின் உணர்ச்சி மிகுந்த கூட்டம். ஆனால் இங்கேயோ அதைவிட மூன்று மடங்கு கூட்டம்; துக்கமும் சோகமும் துயரமும் அழுகையும் கூக்குரலும் கொண்ட மக்கள் கூட்டம்! - - இராஜாஜி வந்திருந்ததாகப் பொய் சொல்லி, இந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் தம் புத்தியைக் க்ாட்டத் தவற வில்லை. அண்ணா மறைவு, தமிழர் சமுதாயத்துக்கு மாபெரும் நட்டம் என்பதும், சங்கடமான நிலையை உண்டாக்கி விட்டது என்பதும் உண்மையே! அண்ணா இல்லாத மந்திரி சபைக்குப் புதிய கருத்தோ, புதிய கொள்கையோ, புதிய மந்திரிகளோ கூடத் தேவையில்லை. வேண்டியதெல்லாம் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமையே யாகும். - - இன்றைய ஆட்சி வெறும் தி.மு.க. ஆட்சி அல்ல தமிழர்கள் ஆட்சி. தமிழர்களின் நலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி. ஆகவே இந்த நேரத்தில் கடமை கண் ணிையம் என்பதைவிடக், கட்டுப்பாடே முக்கியமானதாகும்.' 7ந்தேதி விடுதலை'யில் முதல் மந்திரி தேர்தல்' என்ற தலைப்பிட்ட பெட்டிச் செய்தி ஒன்று, பெரியாரால் தரப் பட்டது. "முதல் மந்திரி தேர்தல், வரும் 9ந்தேதியன்று நடைபெற இருப்பதாகச் சேதி வந்தது. மிக்க மகிழ்ச்சி! எவ்வளவு சீக்கிரம் தலைவர் தேர்தல் நடைபெறுகிறதோ, அவ்வளவுக்கு நன்மை அதிகம். எனக்கு இன்றுள்ள இந்த எட்டு மந்திரிகளில் யார் முதல் மந்திரியாக வந்தால் தேவலாம் என்ற சிந்தனைகூடக் கிடையாது. பிளவும், கருத்து வேற்றுமையும் இல்லாமல் தேர்தல் முடிவு இருக்க வேண்டும். வளைய முடியாத கல்தூணில் பிளவு ஏற்பட் டால், பிறகு அபாயத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.' அன்றையத் தலையங்கமும் பெரியாருடையதே; புதிய மந்திரிகள் தேவையில்லை' என்பது தலைப்பு. இதைப்