588 செய்தியில், 13-ந் தேதி பெரியார் எழுதியிருந்தார்- புதிய மந்திரிகளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நாவலர் இருந் திருந்தால் இலாகா பிரிவினையும், அவர் இஷ்டப்படியே நடந்திருக்கும். ராஜிக்கே இடமில்லாமல் அவர் போய் விட்டதால், கலைஞர் அவர்கள் மிக்க ஜாக்கிரதையோடும், பொறுப்போடும் செய்திருக்கிறார். பலர் ஏமாற்றமடைந் திருக்கலாம். அவர்கள் செய்யும் எந்தவிதமான சலசலப்பும், முணுமுணுப்பும், எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பதோடு, 15 நாட்களுக்குள் அண்ணாவை மறந்துவிட்டதாகும்' என்று. . . . பெரியார் திருச்சிக்கு விரைந்தார். ஏன்? அவரிடமே மந்திரி பதவிக்காகப் பலர் சிபாரிசுக்கு வந்தார்களாம். சல சலப்புக்காட்டவேண்டாம்என்று எழுதினாரே.காரணமாகத் தான்! அப்படியும் ஒருவருடைய முணுமுணுப்பு வெளியில் வந்துவிட்டது. துறையூர் து.ப. அழகமுத்து, ஆளுங்கட்சிக் கொறடா, சொன்னதாகச் செய்தி பரவிற்று; நான் மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதற்கு எனக்கு ஜாதியும் இல்லை; படிப்பும் இல்லை” என்றாராம். பெரியார் இதையே குறிப் பிட்டு, 17-ந் தேதி, தமிழ்னின் பரிதாபநிலை' என்று தலை யங்கம் எழுதினார். "ஜனநாயக ஆட்சியில் இன்னின்ன யோக்கியதாம்சம் உள்ளவர்தான் மந்திரியாக வரவேண்டும் என்று கிடையாது. இந்த 11 பேர் கொண்ட தி.மு.க. மந்திரிசபையில் என்னைப் பொறுத்தவரை குறைபாடு இல்லை. கட்சியைக்கொண்டோ, ஆட்சியைக்கொண்டோ வாழ்க்கைக்கு வசதி செய்து கொள்ளாதவர்கள், அதிருப்தி காட்டமாட்டார்கள். இதுவரை அண்ணா செல்வாக்கால் பிணக்கு வெளிப்படையாய்த் தெரியமுடியவில்லை. அண்ணா வக்குமேல்-கட்சி நிலைப்பையும், பலப்படுத்தலையும் கவனித்து வந்தவரிடம் தலைமை போய்விட்டது. மந்திரி பதவிக்காக என்னிடம் சிபாரிசுக்கு வந்தவர்களிடம் சொல்லி விட்டேன், தி.மு.க. பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை என்பதை. அய்யாவிடம் இரகசியம் தங்காது என்பதை வந்தப் பலரும் புரிந்திருப்பார்கள்!
பக்கம்:தந்தை பெரியார்.pdf/617
தோற்றம்