உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

593 யாக்கூப் மறைவுக்காகத் துணைத் தலையங்கம் எழுதிச் சிறப்பித்தது. - 14, 15, தேதிகளில் பெரியார் தி. மு. க. கட்சிக் கட்டுப் பாடு பற்றி மூன்று தலையங்கக் கட்டுரைகள், திட்ட நேர்ந்தது. பேராசிரியர் அன்பழகன் அந்த நிலைமையை உண்டாக்கி விட்டார். சென்னை நேப்பியர் பூங்காவில் பேசும்போது, "நான் கருணாநிதியைத் தலைவர் என்று ஏற்றுக் கொண்டால், என் மனைவியே என்னை மதிக்க மாட்டார்’ என்ற்ாராம்! அதிருப்தியாளர்கள் கட்சியி லிருந்து விலகி விடுவதே நல்லது; பெருந்தன்மையுமாகும். கட்சியில் இருக்கிறவரையில் தலைவருக்குக் கட்டுப்பட்டு தான் தீரவேண்டும். தனி நபரைப்பற்றி எனக்குக் கவலை யில்லை. கருணாநிதியே, அண்ணா எனக்குப் பயந்து கொண்டு இருந்த காலத்தில், என்னை வெளிப்படையாக எதிர்த்துப் பேசி, விலக முயன்றவர்தான். இன்றைக்குக் கருணாநிதி இடத்தில் அன்பழகன் இருந்து, கருணாநிதி தலைவரை மதிக்காமல் பேசினால், அவரையும் இப்படித் தான் நான் கண்டிப்பேன்! உள் விவகாரம் என்ன என்பது எனக்குத் தெரியாது. கட்சியின் கவுரவத்தைக் காப்பது தலைவரின் கடமை. தி. மு. க. இனியும் குறைந்தது 2 பீரியட் (Period) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டும். தி. மு. க. என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தி. மு. க. வைப் பாதுகாப்பதில் அண்ணா எனக்குப் பங்கு ஏற்படுத்திவிட்டார். அதற்காகத்தான் நிபந்தனையற்ற unreserved தொண்டு ஆற்றி வருகிறேன். தி. மு. க. வில் சிலருக்கு ஜாதி உணர்ச்சி, வகுப்பு உணர்ச்சி, படிப்பு உணர்ச்சி, பண உணர்ச்சி இருக்கிறது. தம்மையே மறக்கும் படியான அளவுக்குப் பதவி உணர்ச்சி, பொறாமை உணர்ச்சி இருக்கிறது. இவற்றை யெல்லாம் மறந்து விட்டு இன உணர்ச்சி ஒன்றை மட்டும் பெறவேண்டும். இதற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிவும் தாராளமும் - . 38 سسسهQu