உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 பிரயாணத்தில் கூட ராட்டினம் சுற்றிய மடையன். சாணி வழிக்கும் துணியாகக் கூடப் பயன்படாத கதரை உடுத் §ualsår; 575%urGr, ‘Mr. Ramaswamy! you need not spin hereafter. I exempt you for three months’ stor of எனக்கு எழுதியும், விடாதவன்” என்றார். ', ஏப்ரல் மாதமும் பெரியார் தீவிர சுற்றுப் பயணம் மேற். கொண்டார். மன்னார்குடியில், மாவட்ட தி. க. தலைவர் தோலி சுப்ரமணியம் தலைமையில் பேசும்போது, நம் சமுதாய இழிவை ஒழிக்க விரைவில் மாபெரும் கிளர்ச்சி துவக்குவோம் என்றார். சென்னை மாவட்ட சமூக சீர்திருத்த மாநாட்டிலும், கடவுள் மத சாஸ்திரங்களைப் பாதுகாக்கும் மத்திய ஆட்சி ஒழிந்தாக வேண்டும், என்றார் பெரியார். 20-4-69 அன்று இந்த மாநாடு வே. ஆனைமுத்து தலைமையில் நடந்தது. சேலம் பச்சைமுத்து திறப்பாளர்; மயிலை சம்பந்தமூர்த்தி கொடி ஏற்றியோர்; தே. மு. சண்முகம் வரவேற்பாளர். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்குத் தனி இலாக்கா ஏற்படுத்தப்படும். வறட்சி நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயில் திட்டம் தந்துள்ளோம். மத்திய அரசு இதற்குப் போதிய அளவு உதவாவிடில் மக்கள் நாட்டுப் பிரிவினை கோரக் கூடும். இப்போதெல்லாம் தி. மு. க. ராஜா ஜியைக் கலந்தோசிப்பது இல்லை என சி. சுப்ரமணிய்ம் ஏன் அங்கலாய்க்கிறார்? மாணவர்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியை ஆசிரியர்கள் போதிக்கவேண்டும். நகர சபைத் தேர்தலில் தி. மு. க_கூட்டணிக்கே மகத்தான வெற்றி! ஏழாக இருந்தது; இப்போது 47 நகரசபை தி. மு. க. வசம்-என்றெல்லாம் முதல்வர் கலைஞர் தந்த செய்திகளை, முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது 'விடுதலை’. 107 ஆண்டுகளில், முதல் தமிழர் பிரதம நீதிபதி என்று,பாராட்டியது விடுதலை’ 2-5-69 அன்று. 3ந் தேதி முதல் பி. ஆர். கோகுலகிருஷ்ணன் அட்வகேட் ஜெனரல் ஆனார். ஜனாதிபதி ஜாகீர் உசேன் 3-5-69 அன்று 11, 20 மணிக்குக் காலமானார். வி. வி. கிரி தற்காலிக ஜனாதிபதியாய்ப் பொறுப்பேற்றார். 1.5-69 மே நாள் சென்னைக் கடற்கரையில் பேசிய" பெரியார், புதிய வரலாறு படைத்த தலைமை நீதிபதி