597 நியமனத்தைப் பாராட்டி, இதே போல் சாதி-மத விகிதா சாரத்தின்படி, அரசாங்கம் எல்லாப் பதவிகளிலும் நியமனம் செய்துவர வேண்டும் என்றார். 3-ந் தேதி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்தசாமியைப், பெரியாரும் மணியம்மை யாரும், 16ந் தேதி சென்று கண்டனர். அந்தோ பெருந் தகையாளர் மறைந்தார்’ என்று விடுதலை’ கதறியழு தவாறு, 18ந் தேதி மாலை 3-30 மணிக்கு மறைந்த அன்னாரது சடலத்தின் மீது, 19 காலை 9-30 மணியளவில் பெரியாரும் மணியம்மையாரும் மலர்வளையம் வைத் து மரியாதை செலுத்தினர். பின்னர் 1-6-69 அன்று பெரியார் தலைமையில் கலைஞர், ஏ. கோவிந்தசாமியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். நாம் மானம் பெறவும், நமது ஈனஜாதித்தனம் ஒழியவும், நான்கு காரியங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நெற்றிக்குறி இடக்கூடாது, கோயில்களுக்குக் செல்லக்கூடாது, பண்டிகைகள் எதையுமே கொண்டாடக்கூடாது, பார்ப்பானை பிராமணன் என்று சொல்லக்கூடாது என்பதைக் கோட்பாடுகளாகவே பெரியார் கூறிவந்தார். - கடவுளர் படம் அகற்றும் சுற்றறிக்கை வாபஸ் பெறப்படவில்லை என்று கலைஞர் வேலூரில் 26ந் தேதி கூறினார். வேலூர் சிறையில் ஞாபகார்த்தமாக, அண்ணா சிலை ஒன்றைக் கலைஞர் திறந்து வைத்தார். வறட்சியினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சம். வரும் கல்வி யாண்டில் பி. யூ. சி. வகுப்பில் சேர 73,680 பேருக்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது -என்றார் முதல்வர். தர்மபுரியில் பெரியாரின் முழுஉருவ வெண்கலச்சிலை ஏழடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுத், திறப்பு விழா பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, 24-5-69 அன்று மிகுந்த எழுச்சி யோடும் சிறப்போடும் நடைபெற்றது. மதியழகன் தலைமையில் கலைஞர் திறந்து வைத்தார். சிலை அமைப்புக் குழுத்தலைவர் எம். என். நஞ்சையா வரவேற்றார். சி. பா. ஆதித்தனார்,அன்பில் தர்மலிங்கம், கே. ராஜாராம் எம். பி.,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/626
தோற்றம்