உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

605 காமராஜரின் பிறந்த நாள் விழா சென்னை பாலர் அரங்கில் மாணவர்களால் 18-7-69 அன்று நடத்தப்பட்டது. கலைஞரது பிறந்தநாள் விழாவில் காமராஜர் கலந்து கொள்ள மறுத்தபோதிலும், கலைஞர் இந்த விழாவில் பங்கேற்றார். சி.சுப்ரமணியம், சம்பத், ஹண்டே, என். வி. நடராசன், சிவாஜி கலந்து கொண்டனர். பெரியார் சார்பில் வீரமணி, பெரியார் வேலூர் மருத்துவமனையிலிருந்து தந்த செய்தியை வாசித்தார்- தமிழர்களுக்குக் கல்வி கொடுத்த பெருமையில் பங்கு பெற வேறு யாருக்கும் உரிமை கிடையாது’ என்று 20-7.69 உலக அறிவியலில் குறிப்பிடத் தக்க நாள். ஆம்ஸ்ட்ராங், அல்டிரின் இருவரும், நிலாவில் காலடி வைத்த நான் இந்திய அரசியலிலும் குறிப்பிடத் தக்க நாள்; 14 பேங்குகள் தேச உடைமை ஆன நாள்! தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடும், பகுத்தறிவாளர் மாநாடும் 26, 27 தேதிகளில் நடைபெற்றன. தி.க. மாநாட்டின் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம், திறப்பாளர் திருவாரூர் தங்கராசு; கொடி உயர்த்தியோர் கி. வீரமணி, பகுத்தறிவாளர் மாநாட்டுத் தலைவர் பெரியார்; திறப்பாளர் ஃபாரூக். இந்த நாளில் சென்னையில் தி.மு.க. பொதுக் குழு கூடிப், பேச்சு வார்த்தைகள் மூலமே சுமுகமான முடிவுக்கு வந்து, தலைவராகக் கலைஞர், பொதுச் செயலாளராக நாவலர், பொருளாளராகப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., துணைப் பொதுச் செயலாளர்களாகக் காஞ்சி மணிமொழியார், கே. ராஜாராம் என்ற வகையில் போட்டி யின்றி அறிவிக்கப் பட்டது கேட்டுப் பெரியார் நிம்மதி யடைந்து தலைவர் ஸ்தானம் 20 ஆண்டுகளாகக் காலியா யிருந்தது நிரப்பப்பட்டது' என்றார். 29-ந் தேதி"விடுதலை’’ யில் ரசிக்கத்தக்க செய்தி ஒன்று:-குன்றக்குடி அடிகளார் பூசையில் அணியும் 7,000 ரூபாய் பெறுமான சாமான்கள் திருட்டுப் போயின. போலீசார், பழைய பணியாள் ஒருவ னிடமிருந்து கைப்பற்றினர். இதில் கடவுள் கைகொடுக்க வில்லை-என்று!