606 புதிய அமைச்சர்களாக நாவலர், என். வி. நடராசன், கா. வேழவேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். என். டி. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதைப் பாராட்டி விடுதலை’ 31-7-69 அன்று தலையங்கம் தீட்டியது. "நாடு பஞ்சம் வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானோ? ஆட்சி மீது குறை சொல்லுவதை நிறுத்துகிறானோ? என் உயிர் உள்ளவரை தி. மு. க. ஆட்சியை ஒழியவிடமாட்டேன்!” என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஒர் அக்கிரமத்தைக் குறிப்பிட்டார். "ஜில்லா ஜட்ஜ்கள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, அய்க்கோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்?' என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதைப் பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார். ஆகஸ்டு மாதம், பெரியாருக்கு, இயல்புக்கு மாறான மாதமாகிவிட்டது. 30-7-69 வேலூர் சி. எம். சி. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அறுவை சிகிச்சை நடந்தது. ஆகஸ்டு 2ஆம் நாள் கலைஞர், நாவலர், ப. உ. சண்முகம், முரசொலி மாறன் ஆகியோர் சென்று கண்டு வந்தனர். 4ந் தேதி மாலை 3-30 மணிக்கு திருமதி-திரு எம். ஜி. ராமச்சந்திரன், காலையில் கே. ராஜாராம் ஆகியோர் பார்த்தனர். அன்று பெரியாருக்கு மூத்திரப் பையில் அறுவை நடந்து, உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. 6-ந் தேதி மதியழகன், ஜி. டி. நாயுடு, பி. ஜி. கருத்திருமன் கண்டனர். 7-ந் தேதி புதிய மந்திரி என். வி. நடராசன் தமது குடும்பத்தாருடன் சென்று பெரியாருக்கு மாலையணிவித்தார். அப்போது அங்கிருந்த Dr. பட் அவர் &gfil_th Quñusrif, “He is honourable Mr. N. W. Natarajan. Today he has become a minister. He was once my private secretary' என்று அறிமுகம் செய்துவைத்தார்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/635
தோற்றம்