608 யங்கம் தீட்டியது. 'குடி அரசு துவக்க நாட்களில், வாசன் விளம்பரந் திரட்டும் ஏஜண்டாகப் பண்ரியாற்றி யிருக்கிறார். பெரியாரிடம் மிக்க அன்பு பூண்டவர். ஜெமினி தயாரித்த எல்லாப் படங்களுக்கும் விடுதலை'யில் விளம்பரம் வெளியிட்டு வந்தார். 2-9-69 அன்று பெரியாரும், மணியம்மையாரும் - திருமதி பட்டம்மாள் வாசனிடம் துக்கம் விசாரிக்கச் சென்றனர். மகன் பாலுவும், மணியனும் வரவேற்றனர். 5-ந் தேதி மயிலை இசபெல்லா நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று வந்த ராணி அண்ணியாரைப் பெரியாரும், மணியம்மையாரும் சென்று பார்த்தனர். முதல்வர் கலைஞருடைய முயற்சியால், வானொலியில் :பிராந்தியச் செய்தி'களாயிருந்தது, 1-9-69 முதல் "மாநிலச் செய்தி'களாக மாறிற்று. 26-8-69 அன்று தியாகராயநகர், தருமபுரம் ஆதீன நிலையத்தில், துணை வேந்தரான சுந்தர வடிவேலு, மேலவை உறுப்பினரான குன்றக்குடி அடிகளார், இவற்றுக்குக் காரணமான கலைஞர் ஆகியோருக்குப் பாராட்டு வழங்கப் பெற்றது. மதுவிலக்கு அமுலினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு மான்யம் தராவிட்டால், மதுவிலக்கை ரத்து செய்ய நேரும், என்று முதல்வர் கலைஞர் கூறியதை, "விடுதலை’ முதல் பக்க பேனர் செய்தியாக 7-9-69 அன்று வெளியிட்டது. 9.ந்தேதி சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக எஸ். மகராஜன், பி. எஸ். சோமசுந்தரம் நியமனம் பெற்றுப், பெரியாரின் கனவு நனவாகச், செய்தியாயினர். தேசிய மாணவர் படை யின் ஆணைச் சொற்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்று, மத்திய அமைச்சரவையைச் சார்ந்த எம். ஆர். கிருஷ்ணா சென்னையில் 12-ந்தேதி நேரில் கூறினார். அண்ணாவின் உறுதி வென்றது! 12-ஆம் நாள் பெரியார் வேலூர் மருத்துவ மனை சென்று வந்தார். இந்த ஆண்டு பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதுரகலத்துடன் கொண்டாடப் பட்டது. இராமநாதன் மன்றத்தில்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/637
தோற்றம்