. 610 அந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் கொல்லெனச் "சிரித்தது, அலையோசையாக ஒலித்தது. என். வி. நடராசன், மா. முத்துசாமி, திருவாரூர் கே. தங்கராசு ஆகியோரும் பேஒனர். மணியம்மையார் டாக்டர் பட் அவர்களிடம் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக ஏதோ தொகை வழங் ஒளார்கள். டாக்டர் இருவருக்கும் முதல்வர் பொன்னாடை போர்த்தினார். வீரமணி வரவேற்றுப் பேச, கா. மா. குப்பு சாமி அனைவர்க்கும் மாலை சூட்டினார். தோலி ஆர். சுப்ரமணியம் நன்றி நவின்றார். இந்த ஆண்டு திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங் களின் நிறுவனர் நாள் 27-ந்தேதி நடைபெற்றது. அமைச்சர் என். வி. நடராசன், கல்வி இயக்குநர் சை. வே. சிட்டிபாபு, போலீஸ் அகிகாரி ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 28-ந்தேதி பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, சுய மரியாதைக் குடும்பங்களின் விருந்து, கருத்தரங்கு, பாராட்டு விழா அனைத்தும் சிறப்புற நடந்தன. மதியழகன், சாதிக் பாஷா, ஒ. பி. இராமன், என். டி. சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்துகொண்டனர். வழக்கம் போல் இரு நாட் களி லும் பெரியார் உபசரிப்பும் பேருரையும் உண்டு. நம் முடைய எந்தச் சமுதாயப் புரட்சிக்குமே முட்டுக்கட்டை போடுவது பார்ப்பனர்தான். பார்ப்பன ஏடுகளை வாங்கா தீர்கள். அவர்கள் மிரட்டலும் இனிப் பலிக்காது. ஒரு மலையாளப் பழமொழி என் நினைவுக்கு வருகிறது. ."பொரைக்கொரு முத்தி அரைக்கொரு கத்தி’ என்றால் வீட்டுக்கு ஒரு கிழவியும், இடுப்புக்கு ஒரு கத்தியும் அவசியம் தேவை என்பது. ஆமாம!’ என்று பேசினார் பெரியார். சென்னை இராஜாஜி மண்டபத்தில் அண்ணா படத்தைப் பிரதமர் இந்திராகாந்தி 6-10-69 அன்று திறந்து வைத்தார். ஒரு படம் சட்ட மன்றத்திலும் வைக்கப்பட்டது. 91-வது ஆண்டு பிறந்தநாள் செய்தியாகப் பெரியார் எனது நிலை என்ற தலைப்போடு கட்டுரை வரைந்தார்:எனது 90வது ஆண்டு பிறந்தநாள் விழா மலரில் எனது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/639
தோற்றம்