உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

613 காங்கிரஸ் மத்திய ஆட்சியிலும், பச்சையாகப் பார்ப் பனர்-பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகி விட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக் கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும். மற்றும் 90-வது பிறந்தநாள் மலரில் குறிப்பிட்ட சலிப்பு இப்போது எனக்குக் குறைவென்றே சொல்லலாம். உதாரணமாகத் துறவியாய்ப் போய்விடலாமா என்று எழுதி யிருந்தேனே-இன்று எனக்கு அப்படி எண்ணம் இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்ததுபோல், அதாவது, *இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்!' என்று சொன்ன சொற்கள் எனக்கு உற் சாகத்தைக் கொடுக்கின்றன. - இன்று என்க்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாய்த் தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில சாதிக்கு (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத் தக்கதேயாகும். எனது 90-வது வயதைவிட, 91-வது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத் தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து. -- விபீஷணர்கள் திருந்துவார்களாக! - - . . தி.மு.க. ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக் காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஒடவில்லை; எழுதவும் முடியவில்லை அக்டோபர் மாதத்தில் கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி பற்றியே பெரியாரின் சிந்தனை ஒட்டம் மிகுத்துக் காணப்பெற்றது. விடுதலை’ முதல்பக்கம் பெரிய எழுத்தில் கட்டம் போட்ட செய்தி: சூத்திரன் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி. காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.