615 யானவன் என்று இராஜாஜி கூறியதாகத் தினமணி' ஏடு தெரிவிக்கிறது. அவரைப்பற்றியும் நானும் அப்படியேதான் கருதிக்கொண்டு இருக்கிறேன். நாங்கள் ஏற்றுக்கொண் டிருக்கிற தொண்டிற்கு ஏற்பக் கருத்துவேறுபாடுகள் இருக் கலாம். அது எங்கள் கடமையாகப் போய்விட்டதே!’ என்றார் பெரியார்! பிற்படுத்தப்பட்டோர் நலம்பற்றி ஆராயத் திரு.ஏ.என். சட்டநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் என்.வி. நடராசன், 17-ந் தேதி தெரி வித்தார். இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர், பெரியாரின் கட்டளையை ஏற்றுப் பெயர் கொடுத்தோர், பட்டியல் 17-ந்தேதி முதல் விடுதலை'யில் பத்தி பத்தியாய் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஊக்கம் பெற்ற பெரியார் 18, 19 நாட்களில் இரு தலையங்கக் கட்டுரைகள் தீட்டி னார். முலஸ்தானப் பிரவேசம் என்பது தலைப்பு:-மூலஸ் தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக்கூடாது என்பது கோயில் சம்பந்தமாக, அல்லது ஒரு பொது இடம் சம்பந்த மாக, அரசாங்கத்தார் செய்து கொண்ட ஒரு ஏற்பாடு தானே ஒழிய, அது எந்தவிதத்திலும் ஒரு ம்தசம்பந்தமான தத்துவமாகாது. கோயிலுக்குள்ளாகவோ, மூலஸ்தானத் திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான், இன்ன சாதியார் தான் செல்லலாம்; இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சரித்திர நியமமும் இல்லை. இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை, கோயில் நிர்வாகத்துக்கு, டிரஸ்டி பதவிக்கு இன்ன சாதியாகத் தானிருக்கவேண்டும் என்பதற்கு ஒரு நிர்ப்பந்தமுமில்லை. மதவிரோதமும், சாஸ்திரவிரோதமும், சட்டவிரோதமும் இல்லை. நான் நாஸ்திகக் கொள்கை உடையவனாக இருந்து கொண்டே, சுமார் 20 ஆண்டுகாலம் ஈரோடு, கோபி, பவானி, திருப்பூர் தாலுக்காக்களின் தேவஸ்தானக்கமிட்டித் தலைவராக இருந்திருக்கிறேன். இவன் நாஸ்திகன் என்று
பக்கம்:தந்தை பெரியார்.pdf/644
தோற்றம்