616 கலெக்டரிடம் புகார் செய்த போதுகூட, அவர் சிரித்துக் கொண்டே,இந்துதானே? என்று கேட்டிருக்கிறார். இன்றும் விஷ்ணு கோயில்கள் பலவற்றில் நாம் வெளியிலிருந்து கையை நீட்டினால், எட்டக்கூடிய தூரத்தில் சிலை இருக்கக் காணலாம்.பூசாரிக்குக்கூட, நெற்றியில் நாமமோ விபூதியோ இருக்க வேண்டுமேயொழிய, அவன் ஸ் நானம் செய்து, சுத்தமாக உடுத்திவரவேண்டும் என்ற திட்டங்க.ட இல்லை. நெற்றிக்குறி என்பதும், அதிகாரத்தாலும் செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய, அதற்குச் சட்டமோ சாஸ்திரமோ நிர்ப்பந்தமோ கிடையாது. ஆக, மூலஸ்தானப் பிரவேசத் திற்கும், கர்ப்பக்கிரகப்பிரவேசத்திற்கும் சட்டம், சாஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும்-இந்துமதம் என்பதற்கே-கிடையாது! எங்கள் தோட்டத்தில் மட்டுமே பூக்கக்கூடிய சண்பகப்பூ மனோரஞ்சிதப் பூவை மாலை கட்டி, சாமிக்கு அனுப்புவேன்; அது இரவில் காசிகளின் தலையில் இருப்பதைப் பார்த்திருக் கிறேன். எப்படி வந்தது? அர்ச்சகர் மாமா வேலை பார்ப்பவராயிருப்பார்! எனவே, ஆட்சியாளர் இதைப்பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன். அடுத்த நாள் இழிவு நீக்கக் கிளர்ச்சி என்ற தலைப்பு:சூத்திரர் என்கிற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியல்) காரியமே தவிர இதில் அரசியல் (பொலிடிகல்) ஏதுமில்லை, பலாத்காரமும் இதில் ஏதுமில்லை. நம்நாட்டில் 100க்கு 97 பேராயுள்ள படித்தவர்கள், செல் வவான்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், துணைவேந்தர்கள், மடாதிபதிகள், மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள் ஆகிய யாராயிருந்தாலும் சமுதாயத்தில் கீழ்பிறவியாக, கீழ் மக்களாக, அவர்களுடைய கடவுள் என்கிற சிலையிடம்கூட நெருங்கக்கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்கு வேண்டியவர்களாகத், தலைமுறை தலைமுறையாகத் தடுக் கப்பட்டு, நிரந்தரமான இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதி
பக்கம்:தந்தை பெரியார்.pdf/645
தோற்றம்