617 விருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்படவேண்டும் என்பதற்காகக், கிளர்ச்சி செய்வதென்றால்-இதுவரை செய்யாமல் இருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறும் ஆகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும், ஒருவிதத்திலும், தவறாகவோ கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது! நீக்ரோக்களுக்கும் வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவிபேதம் நிறபேதம் நாகரிகபேதம்-நமக்கும் பார்ப் பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேத முள்ள-மைனாரிட்டியான நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் ஜாதியான, பிரபுக்களான, வெள்ளையரோடு எல்லாத் துறைகளிலும் சரிசமமாய்க் கலந்து, உண்பன, உறங்குவன; பெண்கொடுக்கல், வாங்கல்; உட்படக் கலந்து புழங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100 க்கு 3 பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும், உழைக்காததையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்ப்-பிழைப் பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக நேர்மையாக நாணயமாக இருக்கவேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும், தாங்கள் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்க லாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கின்ற கூட்டம், தங்களை மேல் பிறவி என்றும், நாம் கீழ்ப்பிறவி என்றும் பொது இடமாகிய கடவுள் என்னும் கல்சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக்கூடாத, மிகமிக இழிதன்மையான வர்கள் என்பதான நிபந்தனையை நம்பேரில் ஏற்றிவைத்து, அறைக்கு வெளியில் நின்று வணங்கவேண்டும் என்பதை, நிலைக்க விடலாமா? என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவ மாகும். -- மேலும், குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்கள் என்பதற்கான ஆதாரங்களுமிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியார்தான் பூசாரியாக இருக்க வேண்டு வென்கிற நிபந்தனை எந்த ஆதாரத்திலுமில்லை; குருக்கள் அர்ச்சகர்கள் வீட்டில் மற்றப் பார்ப்பனர்கள் சாப்பிடவோ,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/646
தோற்றம்