உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 பெண் கொடுக்க, எடுக்கவோ மாட்டார்களாம். அந்த நிலையிலிருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்துக்கள், பார்ப்பனரல்லாதவர் மட்டும்-நுழையக் கூடாது என்றால் அது எப்படி நியாயமாகும்? நாம் மூலஸ்தானத்திற்குள் செல்லலாம்; ஆனால் சிலையைத் தொடக் கூடாது என்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் நெருங்கக் கூடாது; அறையின் படியைத் தாண்டக் கூடாது என்பது என்ன நியாயம்? எனவே, இந்தக் கர்ப்பக்கிரகம் என்கிற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை இழிமக்கள் என்றாக்கப்படுவ தற்காகத்தான் இருந்து வருகின்றன. வேறு எந்தப் புனிதத் தன்மையையும் பாதுகாக்க அல்ல. நாம் உள்ளே சென்று: வணங்குவதால், எந்தப் புனிதத் தன்மையும் கெட்டு விடாது; இருந்தாலும் கெடுக்க வேண்டுமென்கிற எண்ணம் நமக்கு இல்லவேயில்லை. - நமது இழிவு நீக்கப்பட வேண்டும் என்கிற ஒரே காரியத் திற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். உடனே பெயர் கொடுங்கள்! " கரூர்வட்ட திராவிடர் கழக மாநாடும், சமூக சீர்திருத்த மாநாடும் 26.10-69-ல் நடைபெற்றன. வீரமணி தலைமை ஏற்க, செல்வி தன்மானம் பி.எஸ் சி. கொடி உயர்த்த, செல்வேந்திரன் திறந்துவைக்க, அமைச்சர் ப.உ. சண்முகம், பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநாடுகள் முடிவுற்றன. 27-ந் தேதி விடுதலை"யில் பாராட்டத்தக்க நியமனப்பகுதியில் வந்த செய்தி ஒன்று:-தமிழக அரசின் பிரச்சார அதிகாரியாக கவிஞர் திரு கருணானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் ஆற்றல் உள்ளவர். குடிஅரசு' போன்ற ஏட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே, துணை ஆசிரி யராகப் பணியாற்றியவர் ஆவார். பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். - r