627 சென்னையின் முன்னாள் துணைமேயராம் டி. ஜி. லெட்சு மணசாமி என்பவர் அரசுத் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதிப், பெரியார் சிலைக்கு அடியில் பொறிக்கப் பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி யிருந்தாராம். ஒருவருக்குச் சிலை எழுப்புகையில், அடியில் அவரது சிந்தனைகளைப் பொறிப்பது வழக்கந்தான் என்று பதில் தரப்பட்டது அவருக்கு! - 'கண்ட்ரோல், ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் நியூ சென்சாக இருந்தது. அதை எடுத்தது இருவருக்கும் அனு கூலமாகும். கண்ட்ரோல் துறையிலுள்ள அதிகாரிகளில் 15 சதவீதம் நேர்மையில்லாதவர்கள்தான். இனி அந்த இலாகா நேர்மையாகிவிடும். 200 ரூபாய் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, ரூபாய்க்குப் படி அரிசி என்பதை 100 ரூபாய் உயர்ந்த வருமானம் என்று வைக்கலாம். உணவுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்காக முதலமைச்சர் அவர்களை யும், உணவு அமைச்சர் அவர்களையும் பாராட்டுகிறேன்ஈ. வெ. ராமசாமி.' "உண்மை-மாத இதழ் ஆண்டுச் சந்தா 3 ரூபாய். கடவுள் புரட்டு, மதப் புரட்டு, சமுதாய இயல் புரட்டு, தேசியப் புரட்டு, புராண இதிகாசப் புரட்டு, சாஸ்திரப் புரட்டு இவைகளை விளக்கிடும் பகுத்தறிவு இதழ். எல்லாரும் சந்தாதாரராகுங்கள். ஈ. வெ. ராமசாமி. முறையே ஜனவரி 9, 10 தேதிகளில் விடுதலை'யில் வெளியான பெட்டிச் செய்திகள் இவை. 14-1-70 பொங்கல் திருநாள் அன்று மாலை 5 மணிக்குத் திருச்சியில் உண்மை" இதழ் வெளியீட்டு விழா நடந்தது. பெரியார் வரவேற் புரை நிகழ்த்தினார். சே. மு. அ. பாலசுப்ரமணியம் தலைமையில், வீரமணி வெளியிட்டார். இப்போதே 6,000 பேர் சந்தா செலுத்தியுள்ளனர், நானே உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்றார் பெரியார். விழாவில் செல் வேந்திரன், அன்பில் தர்மலிங்கம், ஜி. பராங்குசம், டி. டி. வீரப்பா, வே. ஆனைமுத்து, கே. கோவிந்தராஜலு, து. ம.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/656
தோற்றம்