உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர். புலவர் கோ. இமயவரம்பன் நன்றி கூறினார். "உண்மை' முதலிதழில் பெரியாரின் தலையங்கத்தி விருந்து சில பகுதிகள்:- "மக்களைப் பகுத்தறிவு வாதி களாக ஆக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை ஒழித்து, மக்களை அறிவாளிகளாக்கும் பணியில் நான் பல முறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கின்றேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட் டிருக்கிறேன். கடத்த காலத்துக்கு என்று 15 லட்சம் ரூபாயும், இந்த ஆண்டுக்கு என்று 1 லட்சம் ரூபாயும் இன்கம்டாக்ஸ் போடப்பட்டு, என் முயற்சியைத் தடுக்க நினைக்கிறார்கள். இது தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும், மேல் சாதியாராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சைவர்களாலும், 100க்கு 90 கிறிஸ்தவர்களாலும் நான் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களால் வெளிப் படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக் கிறேன். ஓர் அதிசயம், ஆதித்திராவிட மக்களுள், பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. இதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடையத்தக்கதும் உண்டு. என் கட்சியில் கட்டுப்பாடும் கடமைப்பாடும் அதிகம். பிடிக்காவிட்டால் வெளியில் போய்விடுவார்கள். . குடிஅரசு’ துவக்க காலம், மோசமாக இருந்தது. இப்போதும் உண்மை"யின் தொண்டும் எதிர் நீச்சல் தொண்டுதான். குடிஅரசு' இதழைஒழிக்கக் கிறிஸ்தவர்கள் அமெரிக்காவிலிருந்தும் பணம் வரவழைத்தார்கள். பார்ப் பனர்கள் எதிர்ப்புப் பத்திரிகை ஆரம்பித்தும், காலிகளை ஏவியும் எதிர்ப்புக் காட்டினார்கள். 'குடிஅரசு' வாரப் த்திரிகை, விடுதலை’ தினப் பத்திரிகையாக வளர்ந்தது; ஒழிந்து விடவில்லை! உண்மை’ சமுதாய இழிவு, மடமை ஒழிக்கும் தொண்டுக்காக என்றே பிறந்திருக்கிறது. 'உண்மை நாத்திகப் பத்திரிகைதான். சாக்ரடீஸ் த்திகர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், பெர்னார்ட்ஷா நாத்திகர்