உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 தோழர்கள் நிறையப் பேர் தம்மிடம் சிபாரிசுக்கு வந்து தொல்லை தருவதாகப் பெரியார் மிக எரிச்சலுற்றார். நாள்தோறும் தொந்தரவும், வீண் கெட்ட பெயரும் வருவதாக வருத்தத்துடன் எழுதியிருந்தார். 10-2-10 அன்று, கலைஞர் ஆட்சிக்குவந்த ஒராண்டு நிறைவு நாள். அண்ணாவின் இடத்தில் தானிருப்பது, மின்விளக்குக்குப் பதில் மெழுகுவத்தி போலிருந்தாலும், இயன்றவரை ஒளிதருவதாகக் குறிப்பிட்டார். இடிப் பாரையில்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்ற குறளை நினைவூட்டிப், பெரியார் போன்றவர்கள், தான் தவறு செய்தால் எடுத்துக்காட்ட வேண்டினார். 19-ந் தேதி திருச்சியில் தி.மு.க. மாநாடு எழுச்சியுடன் நடந்தது. சி.பி. சிற்றரசு தலைமையில் புரட்சிநடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் துவக்கிவைத்தார். பஞ்சாப் முதல்வர் குர்ணாம்சிங், புதுவையின் தி.மு.க. முதல்வர் ஃபாரூக் ஆகியோர் பங்கேற்றனர். அண்ணா வழியில் அயராதுழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி என்ற அய்ந்து முழக்கங்களைக் கலைஞர் அங்கே தந்தார். தி.மு.க. வின் அரசியல் தீர்மானம் வரவேற்கப் படத்தக்கதே; மத்திய ஆளுங்கட்சிக்கு வரையறுத்த ஆதரவு தருவதாகக் கூறியது சரிதான் - என்று "விடுதலை 21.ந் தேதித் தலையங்கத்தில் குறிப்பிட் டிருந்தது. இந்தி கட்டாயமாக மத்திய அரசு ஊழியர் மீது திணிக்கப்படுவதை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப் பினரான முரசொலி மாறனும், தபால்துறை ஊழிய ரான ஜி. லட்சுமணனும் ரிட்மனு தாக்கல் செய்தனர். 10-2-10 மதுரையில் சுயமரியாதைக் குடும்பங்களின் விருந்து விழாவில் பெரியார் கலந்து கொண்டார். தமிழர் ஒரே இனம், நாம் ஒரே சாதி என்றார், டாக்டர் சந்திர சேகருக்களித்த பேட்டியில் பெரியார் பல நல்ல கருத்துகள் சொன்னார். இளமையில் பிரத்தியட்சமாகப் பலகுழந்தை பெற்ற குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களைக் கண்டார் . கடவுள் கொடுத்தது என்று நம்பியே துன்பங்களை மக்கள் அனுபவித்ததை உணர்ந்தார். அதனால் தான் 1920-ல்